பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளும் பொருளும் வாகவே இயங்குகிறது. ஆடிக் காற்று அடித்தால் ஆலம்பழுப்பு உதிர்ந்து பறக்கிறது. கொந்தளிக்கும் கடல் அலைகளை வாரி வாரி வீசுகிறது. இலவம் பஞ்சு பறக்கிறது. மலையோ அசையாமல் நிற்கிறது. காற்றின் வேகம் பொதுவானது. அதைத் தாங்கும் சக்தியுள்ள பொருள்கள் நிலையாக இருக்கின்றன. மற்றவை பறக்கின்றன. பறப்பதும், நிலையாக இருப்பதும் அந்த அந்தப் பொருள்களைச் சார்ந்தவையே தவிரக் காற்றுப் பாரபட்சமுடை யது எனச் சொல்லலாமா? அப்படியே இறைவனுடைய அருட் சக்தி எல்லோருக்கும் பொதுவாக இருக்கிறது. அவரவர்களுடைய பாவ புண்ணியத்திற்கு ஏற்பத் துன்பமும், இன்பமும் விளைகின்றன. விதியின் சக்தியை நாம் எப்பொழுது உணர்கிறோம்? இன்பம் உண்டாகும்போது யாரும், "இது என் தலைவிதி' என்று சொல்வது இல்லை. 'என்ன ஐயா, உங்கள் பையன் பி.ஏ. முதல் வகுப்பில் தேறியிருக்கிறானாமே?' என்றால் யாராவது, 'இது என் தலை எழுத்து' என்று சொல்கிறார்களா? 'வியாபாரத்தில் உங்களுக்கு நஷ்டம் உண்டாகிவிட்டதாமே?’ என்றால், "எல்லாம் என் தலை எழுத்து' என்கிறார். லாபத்தைத் தலையெழுத்து என்று சொல்வ தில்லை. ஆனால் தலையெழுத்து லாபம், நஷ்டம் இரண்டுக்கும் ஆதாரமாக இருக்கிறது. இருந்தாலும் ஊழின் விளைவு பெரும் பாலும் தீமையாக இருப்பதனால் வல்வினை நோயே ஊழிற் பெருவலிமையுள்ள பகுதியாகத் தோன்றுகிறது. அந்த வல்வினை நோய் எவ்வளவு பொருள் ஈட்டி வைத்தாலும் அவற்றை நுகர விடுவதில்லை. உங்கள் வல்வினை நோய் ஊழிற் பெருவலி உண்ணஒட்டாது. கைக்கு எட்டியது பழம் இருந்தும், அதை எடுத்து எண்ணும் கை இருந்தும், வாய் இருந்தும், வயிறு இருந்தும், பழம் கை வரைக்கும் வருகிறது; அதற்கு மேல் போகாமல் ஊழ் தடுத்து விடுகிறது. "கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை" என்ற பழமொழியைக் கேட்டிருக்கிறோம். அந்தப் பழமொழி காரைக்கால் அம்மையாரின் வரலாற்றை நினைக்கச் செய்கிறது. +25