பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 காப்பாற்றிக் கொள்வதற்கு எந்தவிதமான முயற்சியையும் செய்யாமலே இருக்கிறோம். அருணகிரியாரோ, 'இந்த உடம்பு இருக்கும்போதே, முருகா, என்னை வந்து காத்தருளே என்று பிரார்த்திக்கிறார். கருணை மிக்க இறைவனிடத்தில் அவருக்கு அளவற்ற நம்பிக்கை. 'ஐயையோ சுரம் அதிகமாக இருக்கிறதே! போய் டாக்டரை அழைத்து வாருங்கள்' என்று சொன்னால் நாம் போய் டாக்டரைக் கூப்பிடுகிறோம். டாக்டர், "நோயாளியை இங்கே எடுத்து வா' என்கிறார். அதுதான் தம் கெளவரத்துக்கு ஏற்றது என்று டாக்டர் எண்ணுகிறார். உலகத்தில் இறைவன் அப்படி மரியாதை பார்ப்பது இல்லை. யார் கூப்பிடுகிறார்களோ அவர்கள் இருக்கும் இடத்துக்குத் தானே ஒடி வந்து காத்து அருளுகின்ற தயாமூர்த்தி அவன். ஊர் கூட்டிக் கத்தி அழைக்க வேண்டாம். கை ஒடியத் தட்டி அழைக்க வேண்டாம். உள்ளம் உருக நெஞ்சிளகி, "ஆண்டவனே!” என்று அழைத்தால் போதும். மனத்தில் இருக் கின்ற மாயைத் திரையை நீக்கி, அஞ்ஞானத் திரையை நீக்கி, கூப்பிட்டால், போதும். அவன் உள்ளே இருப்பவன் தானே? மெல்ல அழைத்தாலும் அவனுக்குக் கேட்கும். உள்ளே இருக்கும் அவனைக் கைதியைப் போல அடைத்துவிட்டுப் பூட்டியிருப்ப வர்கள் நாம். பூட்டை உடைத்துவிட்டு, "ஆண்டவனே!” எனக் கூப்பிட்டால் அவன் உடனே உள்ளிருந்து ஓடி வருவான். எங்கோ இருக்கிறவன் வர வேண்டுமென்பது இல்லை. அருணகிரியார் உள்ளக் கதவைத் திறந்து பிரார்த்தனை செய்து கொள்கிறார். இந்த வேண்டுகோள் எத்தனையோ இடங்களில் அவர் பல பல வேண்டுகோளைத் தெரிவித்திருக்கிறார்; 'ஆண்டவனே, எனக்கு ஜபமாலை தா. வள்ளியம்மையோடு மயில் மேலே, நான் வேண்டும்போது நீ வரவேண்டும்' என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். கந்தர் அலங் காரத்தில் இந்தப் பாட்டில்தான், “இந்த உடம்பு அழிவதற்கு முன்னாலே என்னை வந்து நீ காத்தருள வேண்டும்' என்ற வேண்டுகோளைப் போட்டார். ஒருவன் பி.ஏ.யில் தேர்ச்சி பெற்றவுடன் வேலைக்காகப் பல இடங்களுக்கு விண்ணப்பம் போட்டான். தினமும் காலையில் 1838