பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 இவருக்கு எங்கே இது கிடைத்திருக்கும்? என்று யோசனை பண்ணினார். அன்பரையே கேட்டுவிடலாம் என்றெண்ணி, 'காபி மிகவும் நன்றாக இருக்கிறது. நீங்கள் வெளியூரிலிருந்து இந்தக் கொட்டையை வாங்கி வந்தீர்களா?' என்று கேட்டார். நண்பர் சொன்ன பதில் அவரைத் தூக்கி வாரிப் போட்டது. 'வெளியூருக்கு ஏன் போக வேண்டும்? நம்முடைய செட்டியாரே நல்ல சரக்காகக் கொடுக்கிறாரே! அவர் கடையில் வாங்கினது தான் இது' என்று நண்பர் கூறினார். பாவம் அந்த மனிதர் ஏமாந்து போனார். தமக்கு மாத்திரம் அந்த அற்புதமான கொட்டை கிடைக்கிறதென்றும், அதற்கு ஏற்ற விலையைத் தாம் ஒருவரே தரும் சக்தி உடையவரென்றும், மற்றவர்கள் அதை வாங்க முடியாதென்றும் அவர் எண்ணிக் கொண்டிருந்தார். உடனே அவர் செட்டியாரிடம் ஓடி வந்தார். 'செட்டியாரே, உம்முடைய குட்டு வெளிப்பட்டு விட்டது” என்றார். "ஏன்? என்ன சமாசாரம்?' என்று செட்டியார் கேட்டார். 'எனக்கு மாத்திரம் கொடுக்கிறீர் என்று நினைத்திருந்த காபிக் கொட்டை இந்த ஊர் முழுவதும் இருக்கிறதே! எனக்குக் கொடுத்த சரக்கையே எல்லோருக்கும் கொடுத்திருக்கிறீரே!' என்றார் காபி பக்தர். நான் நீங்கள் வருவீர்கள் என்று எதிர்பார்த்து உயர்ந்த சரக்கை வாங்கிக் காத்திருக்க முடியுமா? உங்களைப் போலச் சில பேர் உத்தமமான சரக்குகளை வாங்குபவர்கள் இருப்பதனால் தான் நான் வாங்கி வைக்கிறேன். நீங்களும் அவர்களைப் போன்ற வர்கள் என்று தெரிந்து அதை உங்களுக்குக் கொடுத்தேன். உங்களுக்கு கொடுத்ததைக் காட்டிலும் உயர்ந்ததை எங்காவது நீங்கள் கண்டிருந்தால் என்னைக் குறை கூறலாம். அப்படி இருக்க நியாயம் இல்லையே!' காபி பக்தர் என்ன சொல்வார்? அவர் செட்டியாரிடம் வந்து, "உம்முடைய குட்டு வெளிப் பட்டு விட்டது” என்று சொன்னாரே, அது போலவே அருணகிரி நாதர் சொல்கிறார். அவரிடம் வியாபாரம் செய்த செட்டியார் முருகப் பெருமான். 194