பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 பிரித்து விடுகின்ற விரோத ஞானம் போக வேண்டும். செந்தில் வேலனுக்குத் தொண்டு செய்து கொண்டே, உலகிலுள்ள ஆருயிர் களெல்லாம் அவன் குழந்தைகள் என உணர்ந்து, எல்லா உயிர் களிடத்திலும் அன்பு பாலிப்பதே அவிரோத ஞானம். வீரம் அந்த ஞானம் நமக்கு வந்துவிட்டால் நெஞ்சிலே எத்தனை வீரம் வந்துவிடும், தெரியுமா? யமனுக்கு அஞ்சாத தைரியம் வரும். திருடனையும் பாம்பையும் பேயையும் கண்டு அஞ்சாத தைரியம் ஒரு தைரியமா? காலனுக்கு அஞ்சாமல் நிமிர்ந்து நிற்கும் வீரமே வீரம். இந்திரியங்களின் வழியே செல்கிறவர் களுக்கு அந்த வீரம் வராது. இறைவன் அருளை நம்பிப் பக்தியில் முறுகினவர்களுக்கு வரும். உண்மை அடியார்களை வீரர் என்று பெரிய புராண ஆசிரியர் சொல்கிறார். "ஆரம் கண்டிகை, ஆடையும் கந்தையே, பாரம் ஈசன் பணிஅல தொன்றிலார் ஈர அன்பினர்; யாதும் குறைவிலார்; வீரம் என்னால் விளம்பும் தகையதோ?” சேக்கிழார் ஒரு பெரிய அரசாங்கத்தில் மந்திரியாகப் பதவி வகித்தவர். பல போர்களைப் பார்த்தவர். வீரம் இன்னது என்பதை நன்கு உணர்ந்தவர். அத்தகையவர், 'இந்த வீரம் என்னால் விளம்பும் தன்மையுடையதோ?' என்று கூறுகிறார். சிறந்த வீரம் அதுதான். அத்தகைய வீரப் பெருமக்களுடைய கூட்டத்தைச் சேர்ந்தவர் அருணகிரியார் நம்முடைய கோழை நெஞ்சத்தில் தைரியம் பிறந்து முறுக்கு ஏறி உய்ய வேண்டுமென்ற பெருங் கருணையோடு இந்தப் பாட்டைப் பாடுகிறார். "நான் செந்தில் வேல்முருகனுடைய தொண்டன். எல்லா உயிர்களிடத்தும் அன்பு பாலிக்கின்றவன். என்னுடைய கையில் என்ன ஆயுதம் இருக்கிறது தெரியுமா? செந்தில் வேலனுக்குத் தொண்டாகிய அவிரோத ஞானச் சுடர் வடிவாள் இருக்கிறது. அந்தகா, வந்து பார் சற்று என் கைக்கெட்டவே. என்னை நெருங்கினால் என்ன செய்வேன் தெரியுமா? உன் கையில் இருக்கிற தண்டாயுதமும் திரிசூலமும் 23C)