பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலத்தை வெல்லுதல் இந்தக் கோட்டையில் ஐந்து நுட்பமான வாசல்களை வைத்திருக்கிறான். யுத்தம் வந்துவிட்டால் வாசல்களை அடைத்து விடுவார்கள். அங்கே ஆயுதங்களை வைத்திருப்பார்கள். அந்த வாசலின் வழியே பகைவர்கள் உள்ளே நுழையப் பார்த்தால் அவர்களை ஆயுதங்கள் கொண்டு தாக்குவார்கள். ஐம்பொறிகளின் வழியே அடிக்கடி அரசனாகிய ஆத்மாவைத் தாக்கப் பகைவர்கள் உள்ளே நுழையப் பார்ப்பார்கள். எத்தனை பகைவர்கள் எதிர்த்தாலும் ஆத்மாவாகிய அரசன் புத்தியென்னும் நல்ல மந்திரியின் துணையையே நாடினால், மனம் என்ற கெட்ட மந்திரி தனித்து இயங்கமாட்டாமல் புத்திக்குச் சார்பாகவே காரியங் களைச் செய்வான். புத்தியின் கருத்துக்களுக்கு ஆத்மாவாகிய அரசன் மதிப்புக் கொடுக்கவில்லை என்றால் மனம் என்னும் மந்திரி தன்னிச்சை போலக் காரியங்களைச் செய்ய ஆரம்பித்து விடுவான். அந்த மந்திரி யுத்த காலத்தில் எப்போதும் ஐந்தாம் படைப் பேர்வழியாகவே வேலை செய்வான். அவன் வழியே போனால் நாசமடைய நேரும். பகைவர்கள் ஐம்பொறி வாயில் வழியே உள்ளே புகுந்து கொள்ளும்படியாக மனம் என்னும் மந்திரி செய்துவிடுவான். காதாலே நல்லதைக் கேட்கலாம்; பொல்லாததையும் கேட்க லாம். வாயினாலே ஆண்டவன் திருநாமத்தை ஜபிக்கலாம்; பேசத் தகாத வார்த்தைகளையும் பேசலாம். புத்தி என்ற மந்திரியின் உதவியைப் பெற்றால் காதின் வழியே நல்லவைகளே நுழையும். வாயாலே நல்ல வார்த்தைகளே பேசும் நிலை வரும். மனம் என்ற மந்திரியின் வசப்பட்டுவிட்டாலோ கேட்கத் தகாதனவே காது வழியே நுழையும். பேசத் தகாத வசவுகள் வாயிலே பிறக்கும். உடம்போடு வாழ்கின்ற வாழ்க்கையில் புத்தி என்ற மந்திரியின் துணை ஆத்மா என்ற அரசனுக்கு எப்பொழுதும் இருந்தால் உடம்பாகிய கோட்டைக்குள் இருக்கும் இந்திரியங்கள் எல்லாம் தத்தமக்குரிய நெறியில் நின்று ஒழுக்கம் மிக்க காரியங்களையே புரியும். கோட்டைக்குள் பகைவர்கள் நுழைந்தால், நுழைய முடியாதபடி தாக்கி அரசனுக்கு எவ்விதமான ஊறும் வராதபடி காப்பாற்றுவான். எவ்வளவு பாடுபட்டு உழைக்க வேண்டுமோ அவ்வளவு பாடுபட்டு உழைப்பான். 237