பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 நம் நாட்டில் எல்லாக் காலத்திற்கும் பயன்படுகிற வேலை இறை வழிபாடு. பற்பல கோயில்களைக் கட்டி, ஆறுகால பூசையை ஏற்படுத்தி, அவரவர்களுக்கு எந்தக் காலத்தில் ஒழியுமோ அந்தக் காலத்தில் கோயிலுக்குச் சென்று இறைவனை வணங்க, துதிக்க வழிவகைளைச் செய்திருக்கிறார்கள். சொந்தமாக இறைவனை நினைந்து பாட நமக்கு ஆற்றல் இல்லாவிட்டால் பல்லாயிரக்கணக் கான பாடல்களை நாம் பாடி மகிழப் பெரியவர்கள் அருளிச் செய்திருக்கிறார்கள். அவற்றையெல்லாம் ஒரு முறை படிப்பது என்றாலே நமக்கு ஆயுள் போதாது. இயன்ற அளவு அவற்றைப் படித்து ஆழ்ந்தால் மன அமைதி உண்டாகும். சீலம் ஆண்டவன் வழங்கிய உடம்பிலுள்ள அவயவங்களை அவன்பால் செலுத்தி நல்லொழுக்க நெறியில் நிற்பதைச் சீலம் என்று சொல்வார்கள். உலகில் பிறந்துவிட்டதனால் கடமைகளைச் செய்ய வேண்டுமென்றாலும் அந்தக் கடமைகளுக்குப் புறம்பே நிற்கின்ற பரம்பொருளை எப்போதும் நினைப்பது நல்ல சீலம். வேலை இல்லாதபோது,பரம்பொருளையே அன்பர்கள் தியானம் செய்கிறார்கள். அத்தகையவர்கள் காலத்தை வீண் போக்குவது இல்லை. காலம் போகவில்லை என்று சொல்லாமல் காலம் போதவில்லையே என்பவர்களாக வாழ்கிறார்கள். யமனைப் பார்த்து, 'அந்தகா வந்து பார்' என்று அறை கூவினார் அருணகிரியார். அதை முன் பாட்டில் பார்த்தோம். அந்த நிலை எப்படி வந்தது என்ற கேள்விக்கு விடை போல இந்தப் பாட்டைச் சொல்கிறார். ‘வாழ்க்கையைப் பயனுடை யதாக வைத்துச் சீலத்துடன் வாழ்ந்தால் காலத்தை வெல்லலாம்; அதுவே காலனை வெல்ல வழி என்று சொல்கிறார். நமது வீடுகளில் விழுகிற குப்பையை எடுத்துப் போய் வீதியில் கொட்டினால் கார்ப்பொரேஷன் தொண்டர்கள் அவற்றைப் பெருக்கி எடுத்துப் போகிறார்கள். வீதியில் கொட்டாமல் அங்கே வைத்திருக்கிற தொட்டியில் கொட்டி வந்தால் அதில் உள்ள குப்பையை வண்டிக்காரன் வந்து எடுத்துப் போகிறான். தொட்டி யிலும் கொட்டாமல் வீட்டுப் புழைக் கடையில் குழிதோண்டிப் 242