பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கைக் கூத்து அறுபத்து மூவர் விழாவின் போது சிந்தாதிரிப் பேட்டை முருகன் வீதிவலம் வருகின்றான். முழுக்க முழுக்க வைரங்களி னாலேயே அம் முருகனை அலங்கரித்திருப்பார்கள். அதனாலேயே அவனை வைர முருகன் என்று சொல்வது வழக்கம். ஒரே வைரக் கற்களாலான நகைகளாகவே போட்டுக் கொண்டிருப்பான். நம்முடைய நாட்டில் பெண்களுக்கு நகை என்றால் கொஞ்சம் அதிக ஆசை. புன்னகையைவிடப் பொன்னகையின் மேல் ஆசை அதைவிடக் கல் நகையின் மேல் ஆசை. இறைவனிடத்தில் அன்பு உடையவர்கள், ஞானம் ஆகிய கத்தியைக் கட்டிக் கொண்டிருக்கும் நெஞ்சமுடையவர்கள், அவனைத் தரிசித்து, 'சண்முகநாதரின் திருக்கோலந்தான் எத்தனை அழகு இந்தக் குமரேசனது இரு தாளும், சிலம்பும், சதங்கையும், தண்டையும், சண்முகமும், தோளும் கடம்பும் எனக்கு முன்னே சதா தோன்றிக் கொண்டே இருக்கக் கூடாவா?' என நெகிழ்ந்து வேண்டுகிறார் கள். ஆனால் அங்கே வந்த ஒரு பெண் அங்கேயுள்ள கண்ணியில் சிக்கிக் கொள்கிறாள். 'எவ்வளவு பெரிய வைரப் பதக்கம் போட்டிருக்கிறது பார்த்தாயா? இது எத்தனை விலை இருக்கும்? நம் ஜமீன்தாரிணி அம்மாள் போட்டிருப்பதைவிடப் பெரியதாக இருக்கிறதே!' என்கிறாள். இப்படி இந்த உலகம் முழுவதும் நல்ல இடமோ, பொல்லாத இடமோ எங்கே பார்த்தாலும் இந்தக் கண்ணி பரப்பப்பட்டிருக் கிறது. அதில் சிச்கிக் கொள்ளாமல் நெஞ்சம் தப்பிக் கொள்ள வேண்டுமென்றால் ஞானம் என்ற கத்தி வேண்டும். ஞானம் இருந்தால் கண்ணிகள் அறுபட்டுப் போகும். பெரும்பாலான நெஞ்சங்களுக்கு அது இல்லை. பாசவலைக்குள் சிக்கிக் கொள்கிற ஆற்றல்தான் இருக்கிறது. அப்படிச் சிக்கிக் கொள்ளும்போது பின்னால் இருக்கிற ஐந்து பேர்வழிகள் அதை ஆட்டத் தொடங்குகிறார்கள். உலகமாகிய பெரிய மேடையில் பாசமாகிற கயிற்றால் நம்மைப் பிடித்துக் கொண்டு ஐவரும் ஆட்டி வைக்கிறார்கள். கயிற்றைச் சுற்றி மிக வேகமாக இழுத்துவிட்டால் பம்பரம் மிகவேகமாகச் சுழலுகிறது. அதைப் போல நெஞ்சம் சுழன்று கொண்டே இருக்கிறது. பாசமாகிற கயிற்றினால் சுற்றப்பட்டு ஐந்து பேர்களால் மிக வேகமாகச் சுழலுகிறது. ஒர் இடத்தில் 15