பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 எவ்வளவு ஏழையான தாயாக இருந்தாலும் தன் செல்வ நிலைக்கு உட்பட்டுப் பல பல அணிகளையும், சுவைமிக்க பண்டங்களையும் தன் குழந்தைக்கு அளிக்கிறாள். அதைப்போல யமவாதனையினின்றும் விடுதலை பெற மக்களுக்குப் பல வழிகளைக் கருணைமிக்க ஆசிரியர்கள் காட்டுகிறார்கள். பலவகை வழிபாடுகள் நம் சமயத்தில் பல வகையான வழிபாடுகள் இருப்பதற்குக் காரணம் பல தரப்பட்ட மக்களும் இறைவன் திருவருளுக்குப் பாத்திரமாக வேண்டுமென்ற கருணை நோக்கந்தான். ஒவ்வொரு மனிதருக்கும் உள்ள மனப்பக்குவத்தை உணர்ந்து அதற்கு ஏற்றபடி எப்படி எப்படி உபதேசம் செய்யவேண்டுமோ அப்படிச் செய்தவர்கள் நம் நாட்டுப் பெரியோர்கள். இறைவனது அருளால் இன்பப் பேற்றைப் பெற்றுநின்ற அருணகிரிநாதரும் எல்லா மக்களும் எம்பெருமான் அருளால் இன்பத்துக்கு உரியவர்களாக வேண்டுமென்ற பெருங் கருணையோடு கந்தர் அலங்காரத்தில் பல வழிகளைச் சொல்கிறார். 'ஆருயிர்கள் காலனிடத்திலிருந்து தப்ப வேண்டும்' என்ற கருணையோடு முன்னே, 'அழித்துப் பிறக்கவொட் டாஅயில் வேலன் கவியை அன்பால் எழுத்துப் பிழையறக் கற்கின்றி லீர்எரி மூண்டதென்ன விழித்துப் புகைஎழப் பொங்குவெங் கூற்றன் விடுங்கயிற்றால் கழுத்திற் சுருக்கிட் டிழுக்குமன் றோகவி கற்கின்றதே' என்ற பாட்டில் எதிர்மறை முகமாக, “எம்பெருமான் புகழைச் சொல்லும் தமிழ்க் கவிகளை எழுத்துப் பிழையறக் கற்றால் கூற்று வனுடைய இன்னலுக்கு ஆளாகாமல் இருக்கலாம்' என்பதைப் புலப்படுத்தினார். பிறகு வேலும் மயிலும் துணையாக இருப்பத னால், "மரணப்ரமாதம் நமக்கு இல்லையாம்' என்றார். பிறகு யமனையே அறைகூவி, 'அவிரோத ஞானச் சுடர்வடிவாள் கண்டா யடா!' என்றார். அதற்கு அப்பால், 'குருநாதன் சொன்ன சீலத்தை மெள்ளத் தெளிந்து அறிவார் சிவயோகிகளே, காலத்தை வென்றிருப்பார் என்று கூறினார். இப்போது, 'சுவாமி எனக்குத் தமிழ் தெரியாது. எனக்குக் குருநாதனும் கிடைக்கவில்லை. அப்படியே யாராவது உபதேசம் செய்தாலும் அந்தச் சீலத்தின்படி 26C