பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 என்று ஒருவன் சொன்னான். அதைக் கேட்ட குருநாதர் ஒரு கணம் யோசித்தார். "அப்படி அவன் செய்ய மாட்டானே" என்றார். 'இல்லை. நான் சொன்னால் நீங்க நம்பமாட்டீர்கள். என்னுடன் வாருங்கள். இன்று இரவு நான் காட்டுகிறேன்' என்று அவன் சொன்னான். “சரி” என்று அன்று இரவு அவனோடு போய்ப் பார்த்தபோது, அவன் சொன்னது போலவே சிஷ்யன் முதலில் குருநாதரின் படுக்கையைப் போட்டான். உடனே அதில் படுத்துப் புரணடான. குருநாதர் உடனே அவனிடம் போய், 'ஏன் இப்படிப் படுத்துப் புரளுகிறாய்?' என்று கேட்டார். "சுவாமி இந்தப் படுக்கை தாங்கள் படுத்துக் கொண்டு உறங்க வேண்டியதாயிற்றே. படுக்கையை நன்றாகத் தட்டித்தான் போட்டேன்; என்றாலும், என் கண்ணுக்குத் தெரியாமல் மணல் இருந்தால் அது தேவரீர் திருமேனியில் உறுத்தும். அப்படி இருந்தால் அதையும் தட்டிவிடலாம் என்பதற்காகப் படுத்துப் பார்த்தேன்' என்றானாம். இறக்கும்போது நினைவு காக்கை நமக்கு உண்டு காட்டியாக இருக்கிறது. இது காக்கைக்குச் சோறு போடுவதனால் விளையும் ஒரு பயன். மற்றொன்றையும் பார்க்கலாம். காக்கை ஒரு பறவை. பறவைக்கு ஒரே நோக்கந்தான் வாழ் நாளில் உண்டு. அதற்குப் பக்தி தெரியாது; சங்கீதம் தெரியாது. பசி தெரியும். தினமும் அதற்கு உணவு அளித்தால், இங்கே போனால் இந்த அம்மாள் இந்த வேளையில் உணவு அளிப்பாள் என்பது தெரியும். சாகும்போது அது என்ன நினைக்கிறது? பசிக் கிறதே. அங்கே போனால் அந்த அம்மாள் உணவு போடுவாளே! என்று அந்த அம்மாளை நினைக்கிறது. அந்த நினைப்பினால் அடுத்த பிறவி மனிதப் பிறவியாகக் கிடைக்கிறது. இவ்வளவும் எதற்காகச் சொன்னேன்? இறக்கும்போது எந்த நினைவு தோன்றுகிறதோ அதற்கு ஏற்றபடி பிறவி அமையும். இறைவனுடைய நினைப்போடு இறந்தால் மறுமையில் இறைவன் அருள் கிடைக்கும். இறக்கும்போது இறைவனை நினைக்க 272