பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டமும் அகண்டமும் என்பதைக் கேட்டு, அதை நம்பி முயற்சி செய்ய வேண்டும். இறைவன் திருவருளைப் பெற்று இன்பத்தில் திளைத்த எத்தனையோ ஞானிகள் நம் நாட்டில் இருந்தார்கள். அவன் அருளைப் பெறாதவர்களும் தாம் பெற்ற இன்பத்தைப் பெற வேண்டுமென்ற கருணையோடு அவர்கள் தம் அநுபவத்தை எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் மிக நல்லவர்கள்; நம் நம்பிக்கைக்கு உரியவர்கள். அவர்களுள் ஒருவர் அருணகிரியார். அவர் சில சமயங்களில் தமக்கு இன்ப நலத்தை வழங்கிய எம்பெருமானுடைய திருவுருவத்தை அடிமுதல் முடியின் காறும் வருணிக்கிறார். சில இடங்களில், "அவன் இன்னவாறு இருப்பான் என்று நான் எவ்வாறு சொல்ல முடியும்? மனவாக்குச் செயங்க்கு அப்பாற்பட்டவன் ஆயிற்றே" என்கிறார். இந்த இரண்டையும் சேர்த்துப் பார்க்கும்போது நமக்கு மயக்கம் உண்டாகிறது. உருவ வழிபாடு விவேகானந்த சுவாமி அமெரிக்காவுக்குச் சென்று சிகாகோ நகரத்தில் பெரிய விரிவுரை நிகழ்த்தினார். அங்கே கூடியிருந்த உலகப் பேரறிஞர்கள் நுட்பமான கருத்துக்கள் புதைந்த அவர் சொற்பொழிவைக் கேட்டுப் பரவசமாகப் போனார்கள். அந் நாட்டைச் சேர்ந்த பலர் அவரிடம் அன்புகொண்டு அணுகிப் பணிந்தார்கள். அவர்களுக்குள் ஒருவர் ஒருநாள் விவேகானந்தரைப் பார்த்துக் கேட்டார்; உங்கள் நாட்டில் உள்ள சமயத்தைப் பற்றிப் பேசினர்கள். இறைவன் எல்லை கடந்தவன், மனவாக்குச் செய லாலே உணர்வதற்கு அரியவன் என்று சொன்னிர்கள். அத்தனை யும் மிகவும் பொருத்தமாகத் தோன்றுகின்றனவென்றும் அங்கே கடவுளின் திருவுருவங்களுக்குப் பூசை முதலியன நடந்து வரு கின்றனவென்றும் சொன்னீர்களே, அதுதான் விளங்கவில்லை. எல்லைக்குள் அடங்காமல் இருக்கிற கடவுளுக்கு, அருவமாகிய பரம்பொருளுக்கு, உருவம் அமைத்து வழிபடுவது எதற்காக?" என்று கேட்டாராம். விவேகானந்தர் அதற்கு உடனே விடை சொல்லவில்லை. அவர் வீட்டிலே ஒரு படம் இருந்தது. "இது யார்?' என்று சுவாமிகள் கேட்டார். 'என் தந்தையார்' என்று கூறினார் அவர். 'வெறும் சட்டமும், கண்ணாடியும், அட்டையும் ஒவியமுமாக 283