பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 அகண்டவெளிப் பரப்பு இருக்கிறது என்பதையும் உணர்ந்தான். கண்டதற்கு ஒர் எல்லை இருந்ததைக் காணும்போது காணாத தாகிய எல்லை கடந்த ஒன்று இருப்பதை உணர்ந்தான். கண்டமும் அகண்டமும் இப்படியே, நல்லவர்களுடைய உபதேசத்தால் நாம் அகண்ட மாக இருக்கின்ற இறைவனின் உருவத்தைக் கண்டமாகக் காண்கிறோம். மேலும் மேலும் நமது பார்வைக்குத் தடையாக இருக்கிற பொருள்கள் விலகும்போது நம் பார்வை விரிந்து கொண்டே போகும். அப்பொழுதும் நம் கண் பார்வையின் எல்லைக் குள் அகப்பட்டே அகண்டத்தின் பகுதியைக் கண்டமாகக் காண் போம். ஆனால் முன்பு காணாதன எல்லாம் கண்டோம் என வியக்கும் நிலை உண்டாகும். கோயிலில் காணும் காட்சி ஒருவன் கோயிலுக்குப் போகிறான். அங்கே உள்ள விக்கிர கத்தைப் பார்த்துவிட்டு மற்றவர்களைப் போலக் கன்னத்தில் போட்டுக்கொண்டு வருகிறான். அவன் கண்ணில் கோயிலில் உள்ள கூட்டம், விளக்குகள், சுவாமியின் உருவம் ஆகியவை படுகின்றன. வேறு ஒருவன் கோயிலுக்குப் போகிறான். அவன் கண்ணில் கோயிலில் நின்றவர்கள் யார் யார் என்பது படவில்லை. ஆண்டவனது விக்கிரகத்தைத் தரிசித்து, வைத்த கண் வாங்காமல் மெய் சிலிர்க்கப் பார்க்கிறான். வெளியே வரும்போது, "ஆண்ட வன் முகம் கொஞ்சுவது போல இருக்கிறது' என்கிறான். முதலில் கோயிலுக்குப் போய் வந்தவன், 'குழந்தையா கொஞ்சு வதற்கு? கல் கொஞ்சுமா? பைத்தியக்காரன்!” என்று இவனைப் பார்த்துச் சொல்கிறான். திருச்செங்கோட்டு முருகனை அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரையில் எத்தனையோ பேர்கள் பார்த்துக் கொண்டே வருகிறார்கள். ஆனால் செங்கோட்டு வேலவனைப் பார்த்து விட்டு அருணகிரியார் சொல்வதைக் கேளுங்கள். "செங்கோட னைச்சென்று கண்டுதொழ நாலா யிரங்கண் படைத்திலனே அந்த நான்முகனே!" 288