பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 மலைக்குள் புகுந்துகொண்டு சூரன் இழைத்த அநீதிகள் சொல் லொணாதவை. அவனை வெற்றி கொள்வதற்காக எம்பெருமான் அவனோடு போரிட்ட வரலாற்றைக் கந்தபுராணம் மிக விரிவாகச் சொல்கிறது. சூரன் பல பல உருவம் தாங்கி வந்து முருகப் பெருமா னோடு போரிட்டான். கடலுக்குள் புகுந்து ஒளிந்து கொண்டான். சூரனுக்கு ஒளிய இடம் கொடுத்த சமுத்திரத்திற்குள் தன் வேலைச் செலுத்தி அதன் நீர் வற்றிப் போகும்படி செய்தான் முருகன். சிந்து வெந்து. சிந்து - சமுத்திரம். அது கொதித்து ஆவியாகி விட்டது. அடுத்தபடியாகச் சூரன் மாமரமாக நின்றான். உலகில் உள்ள மாமரத்தின் வேர் மண்ணுக்குள்ளும், கப்பு கிளைகள் எல்லாம் மேல் நோக்கியும் இருக்கின்றன. ஆனால் வேர் மேல் நோக்கி யும், கிளை இலைகள் எல்லாம் கீழ்நோக்கியும் இருக்கும் வண்ணம் சூரன் நின்றான். அந்த மாமரம் எரிந்தது. கொக்குத் தறிபட்டு எரிபட்டு. கொக்கு - மாமரம். அது தறிபட்டது; துண்டாயிற்று. பின்பு எரிபட்டது. வெறும் மாமரமாக இருந்தால் கரியும் சாம்பலும் அதிலிருந்து வந்திருக்கவேண்டும். ஆனால் உள்ளே சூரன் இருந்தான். அதனால் உதிரம் வந்தது. உதிரம் குமுகுமெனக் கக்க. வேல் பட்ட மாத்திரத்தில் ரத்தம் குமுகுமெனக் கக்கிக் கொண்டு வெளியாயிற்று. மாமரமாக நின்ற சூரன் மாய்ந்தான். புராண வரலாறாக இருந்தால், அவன் படை அழிந்தது, பின்பு அவன் கவசம் அழிந்தது, பிறகு அவன் அழிந்தான் என்று நிகழ்ச்சிகள் வரிசையாக வரும். இது தோத்திர நூல் ஆதலால் சம்பவங்கள் அடைவாக வராமல் முன்பின்னாக வருகின்றன. கிரிஉருவ. சூரனுக்குக் கவசம் போல் இருந்த கிரெளஞ்சாசுரன் ஆகிய கிரி துளைப்பட்டது. அதை உருவிக்கொண்டு சென்றது வேல். 352