பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 மனத்தைத் தடுத்தல் தர்மம் செய்வது முக்கியம். ஆனால் தர்மம் செய்வது புறத்தில் இருந்தால் போதாது. மனத்திலிருந்து அந்த அற நினைவு உண்டாக வேண்டும். அறமல்லாத வகையிலே புகும் மனத்தை அறத்திலே செலுத்த வேண்டும். மனம் தூய்மை உடையதாக, அன்பு உடையதாக இருந்தால், அங்கே உண்டாகின்ற எண்ணங்கள் உண்மையான செயலாக மாறும். அந்தச் செயல் நிரந்தரமாகவும் நீடிக்கும். அதை அருணகிரிநாதர் தெரிந்து கொண்டார். "நீ இருந்த படி இரு கை காலை ஆட்ட வேண்டாம். ஆனால் ஒரு காரியம் மாத்திரம் செய். கடிவாளம் எதுவும் இல்லாமல் தலைதெறிக ஒடிக் கொண்டிருக்கிறது மனம். அதன் ஒட்டத்தை நிறுத்த வேண்டாம்; ஒடும்போது லகானை மாத்திரம் இழுத்துப் பிடி' என்கிறார். தடுங்கோள் மனத்தை. அவர், 'மனத்தை ஓடாமல் செய்யுங்கள்' என்று சொல்லலாம். 'மனத்தை அடியோடு அழித்துவிடுங்கள் என்றும் சொல்லலாம். அப்படிச் சொல்லவில்லை. மனத்தை அடக்கிப் பக்குவமாக்குகிற பெரியவர்கள் மூன்று வகையான காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒன்று மனத்தைத் தடுப்பது. மற்றொன்று மனத்தை நிறுத்துவது. மூன்றாவது மனத்தை அழிப்பது. மனத்தைத் தடுப்பது என்பது, போகும் வழியை மாற்றுவது; மடை மாற்றுவது. ஒட்டத்தை நிறுத்துவது அல்ல. மனத்தை நிறுத்துவது என்றால் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அசையாமல் நிற்கச் செய்வது. அப்புறம், நின்ற மனத்தை இறந்து போகும்படி செய்யும் நிலை ஒன்று. அவ்வாறு மனம் அற்ற பரிசுத்த நிலையே ஜீவன் முத்தி நிலை. இந்த நிலை எப்படி வரும் தன் இச்சைப்படி ஒடுகின்ற மனத்தை மடைமாற்றி ஒடச் செய்து, பின்னர் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிற்கச் செய்து பழகப் பழகக் கடைசியில் வரும். 'இப்பொழுது மனம் உன்னைத் தடுத்துக் கொண்டிருக்கிறது. இனி நீ மனத்தைத் தடு" என்று அருணகிரியார் ஆரம்பிக்கிறார். 'உன் மனக் குதிரையின் கடிவாளத்தை வேறு யார் யாரோ ೧ಕ್ಫ® ஒட்டுகிறார்கள் அதை மாற்றி நீ பிடித்துக் கொள். பாய்ந்தோடுகிற மனத்தை நிறுத்த வேண்டாம்; மடை மாற்றி விடு' என்கிறார். 54