பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 பற்றை விட்டு விட்டுக் கிளம்பிவிட்டான். வழியில் நக்கீரர் வரு கிறார். அவர் முகத்தைப் பார்க்கும் போதே அவனுக்கு, 'முருகன் எங்கே இருக்கிறான்?" என்று அவரிடம் கேட்க வேண்டுமெனத் தோன்றுகிறது. 'சுவாமி, உங்களைப் பார்த்தால், ஆண்டவனுடைய அருள் அநுபவம் உடையவராகத் தோன்றுகிறதே ஆண்டவன் முருகன் எங்கே இருக்கிறான்?' எனக் கேட்கிறான். 'முருகனைத் தேட ஆரம்பித்துவிட்டாயா? வீட்டை விட்டும் கிளம்பிவிட்டாயா? மெத்த மகிழ்ச்சி. அப்படியானால் இனி ஒரு கணம்கூடத் தாமதிக்காதே; திரும்பிப் பார்க்காதே. அவன் அருளை இப்பொழுதே நீ பெறுவாய். உடனே புறப்படு' என்கிறார். “எய்யா நல்இசைச் செவ்வேல் சேஎய் சேவடி படரும் செம்மல் உள்ளமொடு நலம்புரி கொள்கைப் புலம்பிரிந்து உறையும் செலவுநீ நயந்தனை ஆயின், பலவுடன் நன்னர் நெஞ்சத்து இன்னசை வாய்ப்ப இன்னே பெறுதிநீ முன்னிய வினையே." 'நீ பிறந்த குலம் என்ன? செய்துவந்த தொழில் என்ன?’ என்பன போன்ற கேள்விகளை அவர் கேட்கவில்லை. 'உடனே புறப்படு, இன்னே பெறுதி நீ" என்று சொல்கிறார். இப்படித்தான் ஞானிகள் இறைவனது அருளினால் ஞானத்தைப் பெற்ற மாத்திரத்தில் அவனுடைய திருவடியில் சேர்ந்து எல்லை யில்லா இன்ப நலங்களைத் துய்க்க, ஒரு கணமும் தாமதமின்றி ஒடுகிறார்கள். 'நமக்குத் தெரியாமல் அவர்கள் எங்கே போய்விடு கிறார்கள்?’ எனக் கேட்கலாம். அவர்களது உடல் நம்மிடையே இருந்தாலும் மனத்தால் அவர்கள் நம்மைவிட்டு வெகுதூரம் ஓடி விடுகிறார்கள். அப்படி ஒடிவிட வேண்டுமென்ற உள்ளம் படைத்த மக்களுக்குச் சொல்வதைத் தம் மனத்துக்குச் சொல்கிறார் அருணகிரியார். "எங்கே போவது, போனாலும் நம்மிடம் இருக்கும் ஞானச் செல்வத்தை எப்படிப் பாதுகாப்பது, என்ற கவலை இனி வேண்டாம். வேலாயுதனைத் துணையாகக் கொள்வோம். இங்கே பகல் இருக்கிறது. இரவு இருக்கிறது. ஞானத்தைக் குலைக்கும் அஞ்ஞானமாகிய சூது இருக்கிறது. எங்கே பார்த்தாலும் மனிதர் 73