பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 அச்சிட்டுத் தருகிறேன் என்று சொல்லி அச்சிட்டுக் கொடுத்தார் அந்த துரை. அவர் பெயர் சிஸ்ே. சிறப்புப் பாயிரம் பெற்றது தாம் இயற்றிய நந்தனார் சரித்திரப் பாடல்களுக்குப் பல இடத்திலே சிறப்புப் பாயிரம் வாங்குவதற்குப் பதிலாக மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடத்தில் வாங்கிவிட்டால் போதும் என்று நினைத்தார் கோபாலகிருஷ்ண பாரதியார். அதற்காக அடிக்கடி பிள்ளையவர்களைச் சந்தித்துக் கேட்டு வந்தார். பிள்ளையவர்களுக்கு ஒரு நினைவு. வருகலாமோ' என்பது போன்ற சொற்கள் பாரதியாரின் பாடல்களில் இருந்தன. வருக லாமோ என்ற சொல்லே தமிழில் இல்லையே. இலக்கணப் பிழை உள்ள பாடல்களுக்குச் சிறப்புப் பாயிரம் வழங்குவது சரியல்லவே' என்று எண்ணினார். ஆனால் அதை அவரிடம் சொல்லவில்லை. உங்கள் பாட்டுக்களை எவ்வளவு பேர் கேட்டு ரசிக்கிறார்கள் அதற்குள்ள பெருமை எவ்வளவு அதற்கு நான் சிறப்புப் பாயிரம் கொடுக்க வேண்டுமா?" என்று சொல்லித் தட்டிக் கழித்து வந்தார். பாரதியாரும் விடாமல் அடிக்கடி சென்று வந்தார். ஒரு நாள் பகல் நேரத்தில் பிள்ளையவர்களைப் பார்க்கப் பாரதியார் சென்றார். எப்போதும் அப்புலவர் பெருமான் பிற்பக லில் சிறிது நேரம் உறங்குவது வழக்கம். அன்றைக்கும் அவர் உறங்கிக் கொண்டிருந்தார். அதனால் வீதித் திண்ணையிலே உட்கார்ந்திருந்தார். பாரதியார். சங்கீதம் தெரிந்தவர் சும்மா இருப்பாரா தாம் இயற்றியுள்ள நந்தனார் சரித்திரப் பாடல்களை மெள்ள ராகம் போட்டுப் பாதியார் பாட ஆரம்பித்தார். குரல் கேட்ட மாத்திரத்திலேயே புலவர் விழித்துக் கொண்டார். ஆனாலும் கண்ணைத் திறக்காமலேயே அந்தப் பாடல்களைப் படுத்தபடியே கேட்கலானார். பக்தி வளம் நிரம்பிய அந்தப் பாட்டு அவரை உருக்கிவிட்டது. பாரதியார் மற்றொரு பாட்டுப் பாடினார். புலவர் தமிழை மறந்தார். மூன்றாவது பாட்டுப் பாடும்போது அவர் புலமையை மறந்தார். நான்காவது பாட்டுப் பாடி முடித்தார் பாரதியார். புலவர் திலகர் சட்டென்று எழுந் திருந்து திண்ணைக்கு வந்து, 'அதிக நேரம் உட்கார்ந்திருக் j 32