பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வணங்காத் தலை எத்தனை வேகமாக நாம் இப்போது நடை போடுகிறோம்! ஆனால் குழந்தையாக இருக்கும்போது இந்த நடையைப் பயில எத்தனை முறை கீழே விழுந்திருப்போம்! நடைவண்டியைப் பிடித்துக் கொண்டும், தாயின் கையைப் பிடித்துக் கொண்டும் சுவரைப் பிடித்துக் கொண்டும் நடை பயின்றிருப்போம். சாமானிய நடைக்கே, உடம்பு நடக்கிற நடைக்கே அத்தனை பழக்கம் வேண்டுமானால் மனம் நல்ல பாதையில் செல்கிற நடைக்கு எத்தனை பழக்கம் வேண்டும் உடம்பு நடக்கிற நடை மிகச் சாமானியமானது. உரை நடக்கும் நடையும் சாமானியந்தான். மனம் நடக்கிற நடைதான் மிகக் கடினமானது. மனம் நடக்கிற நடைக்குத்தான் ஒழுக்கம் என்று பெயர். 'ஐயா என்ன, நல்ல நடை உடையவரா?' என்று கேட்டால், 'அவர் நடையா? அவர் காலை விந்தி விந்தி நடப்பவராயிற்றே!' என்றா பதில் சொல்கிறோம்? அப்படிச் சொன்னால் தமிழ் மரபு தெரியாதவர் ஆகிறோம். நடை என்பது அங்கே ஒழுக்கத்தைக் குறிக்கும். நல்ல ஒழுக்கம் உடையவனை, “நல்ல நடை உடை யவன்' என்று சொல்வார்கள் தமிழர்கள். மனம் நடந்து செல்கிற வழிக்குத்தான் மார்க்கம் என்று பெயர். இந்த மார்க்கத்தைக் காட்டுபவர்களை, மன நடைக்கு, ஒழுக்க நெறிக்கு வழி காட்டு பவர்களை, மார்க்க தரிசிகள் என்றும், சமயாசாரியர்கள் என்றும் சொல்கிறோம். அவர்கள் காட்டுகின்ற மார்க்கம் மனத்தோடு பொருந்திய மார்க்கம். அதுதான் சமய நெறி ஆகும். அவ்வழியில் செல்ல வேண்டுமானால் மனம் மெல்ல மெல்ல அன்பு மயமாக வேண்டும். சமய நெறி யாரிடமாவது போய் வழி கேட்டால் உடனே, "அப்பா, நீ எங்கே போக வேண்டும்?' என்று கேட்பார்கள். புறப்படுகிற இடத்திற்கும், சென்று சேருகிற இடத்திற்கும் இடையில் உள்ளது தான் வழி ஆகும். இந்த இரண்டும் இல்லாதபோது வழிக்கு இடம் இல்லை. நாம் இருக்கிற இடம் மாயப் பிரபஞ்சம், சென்று சேருகிற இடம் எது? எல்லா உயிர்களும் சென்று சேருகிற இடம் ஆண்டவனுடைய திருத்தாள்தான். நாம் இருக்கிற இடத்திலிருந்து இறைவனுடைய தாளைச் சென்று சேருகிறதற்கு இடையிலுள்ளது ஒரு நெடிய வழி. இந்தச் சமயமாகிற நெறி எல்லோருக்கும் க.சொ.1il-13 1833