பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 கின்றார்கள். ஆதலின் உலகம் நன்றாக நடைபெற வேண்டி அவர்களுடைய வேள்விக்கு ஆக்கம் தேடுவது ஒரு முகம் 'ஒருமுகம் மந்திர விதியின் மரபுளி வழாஅ அந்தணர் வேள்விஒர்க் கும்மே." மயக்கம் நீக்கும் முகம் எம்பெருமான் ஞானபண்டித சாமி. உலகில் பலர் அறிவு பெற்றிருந்தாலும் அவர்களுடைய அறிவு எல்லாம் ஒருவகையில் குறைவு உடையனவே. ஒருவரை நோக்க மற்றவருடைய அறிவு சிறந்திருந்தாலும் அவர் பின்னும் ஒருவருடைய அறிவை எதிர்பார்க்கும் குறைவு உடையவர் ஆவர். அறியாமை குறைந்து வரவர, அறிவு மிகுந்து வரும். அறியாமை சிறிதும் இல்லாமல் அறிவே தன்னுடைய உருவமாக இருக்கிற எம்பெருமான் மிகச் சிறந்தவர்களுக்குத் தோன்றுகின்ற ஐயங்களைப் போக்கித் தெளிவிப்பான். அப்படித் தெளிவாக்கும் செயலைச் செய்கின்றது ஒரு முகம். 'ஒருமுகம் எஞ்சிய பொருளை ஏமுற நாடித் திங்கள் போலத் திசைவிளக் கும்மே." வெல்லும் முகம் இன்பத்தைச் செய்கின்ற முருகப் பெருமான் நல்லவர் களுக்கு வரும் துன்பத்தையும் போக்குகிறான். தேவர்களுக்குப் பகைவர்களாகிய அசுரர்கள் தேவர்களை மாத்திரம் துன்புறுத்துவது இல்லை. உலகத்திலுள்ள நல்லவர்களுக்கும் துன்பத்தைத் தருகிறார்கள். அவர்களை அடியோடு அழித்துப் போர்க்களத்தில் வெற்றி கொள்ளும் திறல் உடையவன் முருகன். இந்த வீரச் செயலை ஒரு திருமுகம் செய்கின்றது. - 'ஒருமுகம் செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக் கறுவுகொள் நெஞ்சமோடு களம்வேட் டன்றே.' 308