பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வண்டும் மலரும் ஆறுமுகமும் பன்னிரண்டு கரங்களும் உடையவனாக வைத்து வழிபடுகிறார்கள். இப்படி ஒரே தெய்வத்திற்குப் பல உருவங் களும், அவற்றுக்குப் பல மந்திர தந்திரங்களுமாக வைத்துக் கொண்டு வழிபடும் முறையைக் காண்கிறோம். திருவள்ளுவர் கருத்து இவற்றில் பொதுவான பகுதி ஒன்றுமே இல்லையா என்று சிலர் கேட்பது உண்டு. இந்தக் கேள்வி மிகப் பழங்காலத்தில் திருவள்ளுவருக்கு எழுந்தது. அவர் உலகத்தில் பல பல வகையான வாழ்க்கை முறை இருந்தாலும், பலவகை இயல் புள்ள மக்கள் இருந்தாலும், எல்லோருக்கும் பொதுவாக ஒரு நூல் இயற்றவேண்டுமென்று விரும்பினார். எல்லாக் காலத்துக்கும், எல்லாச் சாதியினருக்கும் எல்லா நாட்டவருக்கும் பொதுவான அந்த நூலின் தொடக்கத்தில் கடவுளை வழிபட வேண்டும் என்பதை வற்புறுத்தப் புகுந்தார். 'அகரம் முதல எழுத்தெல்லாம்; ஆதி பகவன் முதற்றே உலகு' என்று தொடங்கினார். இறைவனை வணங்கவேண்டுமென்று சொல்ல வந்தவர் அந்த இறைவனைப் பற்றியும் தெரிவிக்க வேண்டும் அல்லவா? மனதாலும், வாக்காலும், உடம்பாலும் வழிபாடு செய்ய வேண்டுமென்பதைக் கடவுள் வாழ்த்து என்ற அதிகாரத்தில் சொல்கிறார். உடம்பினாலே வணங்குவதற்குத் திருவுருவம் வேண்டும். மனத்தினாலே நினைப்பதற்கும் வேண்டும். ஆகையால் இறைவனுடைய திருவுரும் இப்படி இருக்கும் என்பதைச் சொல்ல வேண்டிய அவசியம் நேர்ந்தது. அவனுடைய திருவுருவத்தை எப்படிச் சொல்வது? இறை வனை வழிபடும் நிலைக்கு ஏற்ற உருவங்கள் இல்லை என்ற சங்கடம் இல்லை. பல உருவங்கள் இருப்பதனால் எதைச் சொல் வது என்ற சங்கடந்தான் எழுந்தது. சிங்கமுகம் உடையவன் என்று சொன்னால் திருமாலைக் குறிக்கும். கொன்றையும் பிறையும் சூடிய கோலத்தைச் சொன்னால் சிவனைக் குறிக்கும். வேலை யும் சேவலையும் சொன்னால் முருகனைக் குறிக்கும். ஆனை முகன் என்றால் விநாயகனைக் குறிக்கும். நான்கு முகம், ஐந்து 3贯7