பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 3 அவன் ஞானமாகிய வேலையே தன் ஆயுதமாக உடையவன். அது தோல்வியே கண்டு அறியாத வேல். எப்போதும் வெற்றியை உடைய வேல். அந்த வெற்றி வேலைத் தன் திருக்கரத்தில் உடைய பெருமாள் அவன். வறுமையால் அல்லலுறுகின்றவர்களிடம் ஒரு புலவர் சொன்னார்; 'அப்பா நீ ஏன் இங்கே அல்லற்படுகிறாய்? பக்கத்து ஊரில் ஒரு வள்ளல் இருக்கிறான். அவன் வீட்டுக்கு எதிரில் காடு கழனிகள் நிறைய இருக்கின்றன. அவன் வீட்டு வாசலில் நெல் கோட்டை இருக்கிறது. வீட்டுக்குள் மூட்டைக் கணக்கில் அரிசி குத்தி வைக்கப்பட்டிருக்கிறது. மடைப்பள்ளிக்குள் போனால் எப்போதும் சோறு இருந்துகொண்டே இருக்கும். இப்பொழுது போனால் மடைப்பள்ளிக்குள் இருக்கும் சோறு கிடைக்கும். மாலையில் போனால் சோறு இராதோ எனக் கவலை வேண்டாம். பானையில் இருக்கும் அரிசியை எடுத்து உணவு சமைத்து வைத்திருப்பான். பத்து நாள் கழித்துப் போனால் பானையில் அரிசி காலியாகி யிருக்குமே என அஞ்சாதே. வீதியில் போட்டிருக்கும் சேரிலிருந்து நெல் எடுத்துக் குத்தி அரிசியாக்கிச் சாதம் படைப்பான். இரண்டு மூன்று மாதம் கழித்துப் போனால் சேர் நெல்லும் காலியாகிப் போயிருக்கலாமே எனக் கவலைப்படாதே. அவன் வீட்டுக்கு எதிரே இருக்கும் நிலம் அவனுடையதுதானே? அந்த நிலத்தில் விளைந்த புது நெல் வந்துவிடும். அப்போதும் இல்லையென்னாது உனக்கு உணவு படைப்பான். எப்போது வேண்டுமானாலும் போ அப்பா!' என்றார். அதுபோல அருணகிரியார் இங்கே சொல்கிறார். வெற்றிவேற் பெருமாள் 'இறைவன் வெற்றிவேல் பெருமாளாக இருக்கிறான். அஞ்ஞானத்தைப் போக்கும் ஞானவேலைத் திருக்கரத்தில் தாங்கிப் பக்தர்கள் வரமாட்டார்களா என்று பார்த்துக் கொண்டிருக்கிறான். அவனிடம் நீ போ அப்பா அவன் இந்தப் பிறவியில் உனக்கு மிகுந்த அல்லல் விளைவிக்கிற தரித்திரத்தை உடனே போக்குவான். அது மாத்திரம் அல்ல. என்றென்றைக்கும் இன்பம் கொடுக்கிற முத்தியையும் வழங்குவான்' என்று தெரிவிக்கிறார். அவனை அடையாளம் கண்டு கொள்ள முடியாதோ எனக் கலங்க வேண்டாம். அவன் வெற்றிவேல் பெருமாள். ஞான சக்தியை 24