பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓங்கார ஒளி சமாதானம் பண்ணி வைக்க வந்தாலும் அவர்களுக்கு மரியாதை கொடுக்காமல் கத்துவான். பகைவன்மேல் விழவேண்டிய அடி சமாதானம் பண்ண வந்தவர்மேல் விழுந்தாலும் விழும். அதை அவன் உணரமாட்டான். கோபம் அவனது அகக்கண்ணையும் மறைத்து, புறக்கண்ணையும் மறைத்துவிடும். இப்படி உள்ளம் கவர்ந்து எழுந்து ஒங்கும் சினத்தைக் காத்துக் கொள்ளும் குணமே குணம். சினம் வராமலேயே இருப்பது உயர்ந்ததுதான். அந்த நிலை முதிர்ந்த ஞானிகளிடந்தான் காணலாம். வீடு தீப்பற்றிக் கொள் ளாமல் பாதுகாப்போடு இருப்பது உயர்வுதான். பற்றிக் கொண்டு விட்டால் வீடு முழுவதும் தீப்பரவாதவாறு தீயை அணைக் கிறோம். முழுவதும் பரவிவிட்டால் பக்கத்து வீடுகள் பற்றிக் கொள்ளும் முன்னே அணைக்கப் பார்க்கிறோம். பக்கத்து வீடு களும் பற்றிக் கொண்டுவிட்டால் ஊர் முழுவதும் நாசமாகாத வாறு அணைக்க முற்படுவது இல்லையா? கோபம் உண்டாகும் போல் இருந்தால் உடனே அதை அடக்க முயல வேண்டும். உண்டாகிவிட்டால் அதன் விளைவு மற்றவர்களிடத்திலும் பரவாதவாறு உடனே தடுத்துக் கொள்வதற்கு முயல வேண்டும். இதுதான் அறிவுக்கு அழகு. ஒருவன்மேல் கோபம் உண்டானால், அந்தக் கோபம் வெளிப்படும் முன், அவன்மேல் எதற்காகக் கோபம் வந்தது? அவன் என்ன தவறு செய்தான்? அந்தப் பிழையை அவன் செய்யும்படி நாம் என்ன செய்தோம்?' என்று கொஞ்சம் சிந்தனை செய்ய முற்பட்டால் போதும்; கோபம் தணிந்துவிடும். அதற் காகவே சிலர், கோபம் வரும்போது பத்து வரை எண்ணச் சொல்வார்கள். அதையும்விடத் தம்முடைய இன்பப் பொருளாக மதிக்கிற மனையாட்டியை நினைத்துக்கொண்டால் கோபம் போய்விடும் என்பர். மனையாட்டியிடத்திலே கோபம் வந்து விட்டால் ஆண்டவன்தான் அடக்கவேண்டும்! அகங்கார மமகாரங்கள் ஆண்டவனுடைய நினைப்பு இருந்தால் போதும்; யாரிடத் திலே கோபம் வந்தாலும் அது வெளிப்பாடு இல்லாமல் அவிந்து 127