பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபிடி சோறு வயிறுடையவர்களுக்கு 'காதுடையவர்கள் எல்லாம் இறைவனுடைய புகழைக் கேட்டு உருக வேண்டும். மற்றக் கவிகளைக் கேளாமல் இருக்க வேண்டும். அதனால் உள்ளமானது பண்பட்டு யமனையும் வெல்லுகிற ஆற்றலைப் பெறுவார்கள்' என்கிற உபதேசத்தைப் போன பாட்டிலே அருணை முனிவர் சொல்லக் கேட்டோம். இந்தப் பாட்டில் வயிறுடைய மக்களுக்கு ஓர் உபதேசம் செய்கிறார். காது இல்லாத செவிடர்கள் இருக்கலாம்; கண் இல்லாத குருடர்கள் இருக்கலாம்; பேச வாய் இல்லாத ஊமை கள் இருக்கலாம். பிற உறுப்புகள் குறைபாடு உடையவராக இருந்தாலும் வயிறு உண்டு. வேறு தொழில் செய்வதில்லை என்று சோம்பியிருந்தாலும் வயிறு சும்மா இராது. அதற்கு ஏதாவது கொடுக்கத்தான் வேண்டும். வயிறுடைய மக்களைப் பார்த்து, 'உங்களுக்குக் காது இருந் தாலும் இறைவன் புகழைச் சொல்லும் கவியைக் கேட்பதற்கு முடியவில்லை என்று நீங்கள் சொல்லலாம். வயிறு இருக்கிறது அல்லவா? வயிற்றுக்கு வேளை வேளைக்குச் சோறு போடுகிறீர் கள் அல்லவா? உங்களுக்கு ஒரு வழி சொல்கிறேன் கேளுங்கள்' என்பாரைப் போல இந்தப் பாட்டில் பேசுகிறார். உணவின் இன்றியமையாமை மனித சமுதாயத்தில் எல்லாரும் செல்வராக இருக்க முடியாது; எல்லாரும் படித்து ஞானிகளாக இருக்க முடியாது. ஆனால், வயிறு எல்லோருக்கும் இருப்பதால் எல்லோரும் சாப்பிடுகிறவர் களாக இருக்கிறார்கள். உலகத்தில் பிறந்தவர்கள் வயிற்றை நிரப்புவதில் சோம்பல் படுவது கிடையாது. பிச்சை எடுத்தாவது உண்கிறார்கள். பெரிய தவ முனிவர்களும் சிலகாலம் உண்ணாமல்