பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 விட்டன. இவை எல்லாம் எம்பெருமானுடைய தியானத்தைக் குலைத்துவிடுமோ? சாதாரண மனிதர்களாக இருந்தால் இதற்குள்ளேயே ஆடிப் போயிருப்பார்கள். மன்மதன் தன் கையிலுள்ள கரும்பு வில்லில் மலர் அம்மைப் பூட்டிக் கொண்டு விடலாமா வேண்டாமா என்று தயங்கித் தயங்கி நின்றான். அவன் உடம்பெல்லாம் நடுங்கியது. அவன் உயிர் தப்ப வேண்டுமென்றால் அந்தக் காரியத்தை அவன் செய்யக் கூடாது. ஆனால் உலகம் எல்லாம் உய்வுபெற வேண்டு மென்றால் அதைச் செய்துதானே ஆகவேண்டும்? வேறு வழி என்ன? உலகம் வாழ வேண்டும் என்று நினைத்தான். மன்மதன் தன்னுடைய வில்லிலிருந்து மலர் அம்புகளை எம்பெருமானின் திருவடியில் அர்ச்சனை செய்வது போலத் தொடுத்தான். காம சங்காரம் ஞானமூர்த்தி மெல்ல நெற்றிக்கண்ணைத் திறந்தார். திறந்த மாத்திரத்தில் மன்மதன் எரிந்து சாம்பலாகி விட்டான். 'அன்புடையார் உலகத்தில் வாழ்வார்கள் அன்பு இல்லாத வர்கள் அறக் கடவுளால் தண்டிக்கப்படுவார்கள்' என்பர். 'கடவுளுக்கு இவ்வளவு பட்சபாதமா?' என்று கேட்கலாமா? கதிரவன் தோன்றுகிறான். சுடர்விடும் அவன் பொற்கிரணங் களைக் கண்டு தாமரைகள் மலர்கின்றன. சூரியன் தாமரையை மலரச் செய்கின்றான் என்று சொல்கிறோம். அவனுடைய கிரணம் பட்டு எலும்பு இல்லாத புழுக்கள் செத்துப் போகின்றன. சூரியன் புழுக்களைக் கொல்கிறான் என்று சொல்கிறோம். அப்படிச் சொன்னாலும், தாமரை மலர்வதும் புழு இறப்பதும் தாமே நிகழ்கின்றன. அவன் இந்த இரண்டு காரியங்களையும் விரும்பிச் செய்யவில்லை. அவன் எல்லாவற்றுக்கும் நடுநிலை யில் நின்று தனக்கு இயல்பாக உள்ள கதிர்கோளடு தோன்றுகிறான். "என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம்' என்றார் வள்ளுவர். சூரியனுடைய சுடரைக் கண்டு தாமரை மலர்கிறதற்குக் காரணம் அதைத் தாங்கிக் கொள்ளும் சக்தி 196