பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 ஒட்டிச் சாய்த்துப் புரட்டுகிறார்கள். எம்பெருமானின் திருவடி தேவர்களுடைய முடிகளில் எல்லாம் பட்டது. அப்பெருமானின் தண்டைச் சிற்றடிக்கு வேறு அலங்காரம் வேண்டுமா? தேவர் களுடைய சிரங்களே அலங்காரமாக விளங்குகின்றன. மயிலேறும்ஐயன் காலுக்கணிகலம் வானோர் முடியும். பூவுலகத்திற்குச் சென்று அடியார்களுக்கு அருள் புரிவதற் காகக் கார் மயிலின் மீது ஏறிய எம்பெருமானின் திருவடிகளுக்கு வானோர் முடிகளே அலங்காரமாக விளங்குகின்றனவாம். வற் கென்ற முடிகளைத் தன் காலுக்கு அலங்காரமாக ஏற்றுக் கொண்டான் பெருமான். பூலோகத்திற்கு வந்தவுடனோ, "எங்கள் வள்ளிமணாளன் வந்து விட்டான் எங்கள் வள்ளி மணாளன் வந்துவிட்டான்' என்று ஆரவாரிக்கின்ற பக்தர்கள், அவன் திரு வடிக்கு மென்மையான, மணமுள்ள கடம்ப மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்கிறார்கள். வானோர் முடி தேவ லோகத்தில் அவன் காலுக்கு அணிகலனாக விளங்கின. பூவுலகத் திலோ பக்தர்கள் துவுகின்ற கடம்ப மலர்கள் அணிகலனாக விளங்கு கின்றன. மயிலேறும் ஐயன் காலுக்கு அணிகலம் வானோர் முடியும் கடம்பும். அப்பாவுக்கு வெண்தலை மாலை ஒன்றை அணிகலனாகச் சொல்லிவிட்டு, மாமாவுக்குத் தண்ணந் துழாய் மாலை ஒன்றை அணிகலனாகச் சொல்லிவிட்டு, மயில் ஏறும் பெருமான் திரு வடியைச் சொல்ல வரும்போது வானோர் முடியும், கடம்ப மலரும் ஆகிய இரண்டு அணிகலங்களை சொன்னார். அப்பால் எம்பெருமான் திருக்கரத்திலுள்ள வேலுக்கு அணிகலனைத் தனியே சொல்லும்போது மூன்று சொல்கிறார். வேலுக்கு அணிகலம் கையில் வேலுக்கு அணிகலம் வேலையும் சூரனும் மேருவுமே. சிவபெருமானைவிடப் பெருமை உடையவன் அவன் குழந்தை. திருமாலைவிடப் பெருமை உடையவன் அவன் மரு கோன். ஆகவே சிவபெருமானுக்கும் திருமாலுக்கும் அலங்கார 3O2