பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருணகிரிநாதப் பெருமானுடைய நூல்களில் ஊற ஊற அவருடைய பெருமை மிகுதியாகத் தெரிகிறது. அவருடைய பாடல்களின் சிறப்பைப் புலவர் பெருமக்கள் அதிகமாக உணர்வதில்லை. முன் ஒரு காலத்தில் அவற்றைப் பரதேசிப் பாடல்களோடும் துக்கடாக்களோடும் சேர்த்துப் பாடி வந்தார்கள். நாள் ஆக ஆகப் பஞ்சாமிர்தத்துக்குச் சுவை மிகுதியாகும். அது போல், அருணகிரிநாதருடைய திருவாக்கு இப்போது அதிகச் சுவை தருவதாகப் பல அன்பர்கள் உணர்ந்து வருகிறார்கள். வள்ளிமலை சுவாமிகளும், திருப்புகழ்ச் சாமி ஐயர் முதலிய பெரு மக்களும் திருப்புகழைப் பரப்பப் பாடுபட்டார்கள். அவர்கள் விதைத்த விதை முளைத்துப் படர்ந்து இன்று மலர்ந்து மணக்கிறது. அருணகிரியாரைப் பழங்காலப் பெருமக்கள் பாராட்டவில்லை என்று எண்ணக்கூடாது. அந்தகக் கவி வீரராகவ முதலியார், வரகவி மார்க்க சகாயதேவர், திருப்போரூர்ச் சிதம்பர சுவாமிகள், தாயுமான சுவாமிகள், தொட்டிக்கலைச் சுப்பிரமணிய முனிவர், சிதம்பர முனிவர், கந்தப்ப தேசிகர், தண்டபாணி சுவாமிகள், பாம்பன் சுவாமிகள் ஆகியவர்கள் அப்பெருமானுடைய திருப் பாடல்களில் ஈடுபட்டு அவரைப் பாராட்டியிருக்கிறார்கள். இருந்தும் புலவர்கள் திருப்புகழில் பழங்காலத்தில் மிகுதியாக ஈடுபாடு உடையவர்களாக இருக்கவில்லை. திருப்புகழில் சந்தத்தை நோக்கிச் சில இலக்கண விதிகளைக் கடந்து சொற்களையும் சொற்றொடர்களையும் அமைத்திருக்கிறார். அவற்றைக் கண்டு, இலக்கணப் புலவர்கள் அவரை மதிக்க வேண்டிய முறையில் வைத்து மதிக்கவில்லை. இந்தச் செய்தியை என்னுடைய ஆசிரியப் பிரானாகிய ரீ ஐயரவர்களே தெரிவித் திருக்கிறார்கள். இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்புவதே மரபு: அருணகிரியார் பாடிய அற்புதமான சந்தப்பாக்களில் வரும் தொடர்களும் அமைப்புகளும் இதுகாறும் வழங்கும் இலக்கணத்