பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 களுக்கு ஆரம்பத்தில் பிராணாயாமம் விதித்திருக்கிறது. சந்தியா வந்தனத்தில் பிராணாயாமம் செய்ய வேண்டிய அவசியம் இருக் கிறது. அதைச் செய்யும்போது மந்திரத்தோடு செய்கின்றோம். அந்த மந்திரத்தில் இறைவனுடைய நினைவு வருவதற்குரிய குறிப்புகள் இருக்கின்றன. பிராணாயாமம் செய்து மனத்தைத் தெளிவுறச் செய்துகொண்டு தியானம் செய்தால் இறைவனுடைய திருவுருவம் மிகத் தெளிவாக மனத்தில் அமையும். உருவத் தியானம் ஒரு நரியின் உடம்பில் தெள்ளுப்பூச்சி பிடித்துவிட்டதாம். நரி மிகவும் சாமர்த்தியம் உடையதாயிற்றே. அது ஒரு குச்சியை வாயில் கெளவிக் கொண்டு மெல்ல ஒரு குளத்தில் இறங்கியது. கால் அளவு தண்ணிருக்குப் போனவுடன் தெள்ளுப்பூச்சிகள் உடம்பில் ஏறின. பின்னும் கொஞ்சம் ஆழத்திற்குச் சென்றவுடன் கழுத்தளவும் தண்ணிரில் மறைந்தது. உடம்பில் இருந்த தெள்ளுப் பூச்சிகள் கழுத்தின் மேலும், தலையின் மேலும் உட்கார்ந்து கொண்டன. பின்பு தலையும் மூழ்கும்படியாக நீரில் சென்றது. அப்போது உடம்பில் இருந்த தெள்ளுப்பூச்சிகள் அத்தனையும் குச்சியைப் பற்றிக் கொண்டன. கடைசியில் நரி குச்சியைத் தண்ணீரில் மூழ்க விட்டுவிட்டுக் கரைக்கு வந்துவிட்டதாம். இவ்வாறு ஒரு கதை உண்டு. மாயை ஆகிய தெள்ளுப் பூச்சி நம்மைப் பற்றிக் கொண்டிருக்க, மாயையின் குட்டி போன்று இருக்கிற மனம் வேதனை தாளமாட்டாமல் எங்கெங்கோ போய் அலைந்து கொண்டிருக்கிறது. ஆண்டவனுடைய உருவமாகிய நச்சியைப் பற்றிக்கொண்டு தியானத்தில் மூழ்கினால் மலம் முதலியன அந்தக் குச்சியோடு போய்விடும். உருவத்தைத் தியானம் பண்ணப் பண்ண மனம் தெளிவுறுகிறது. இப்படி இறைவனைச் சகுணமாகத் தியானித்த பிறகு சகுணம் மறைந்து நிர்க்குண நாட்டம் ஏற்படும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். முதலில் மனம் ஒருமைப்பாடு அடைவதற்குப் பழகி, அந்த இயல்பு கைவந்த பிறகு தியானம் செய்தால், தியானம் முறுக முறுகத் திருவுருவம் மறைந்து மனமும் அடங்கிப் பின்பு இல்லை யாகிவிடும். மனோலயம் உண்டாவதற்கு முன்னாலே மனம் ஒருமைப்பாடு அடைந்து நிற்பதற்கு இறைவனுடைய திருவுருவைத் தியானம் செய்ய வேண்டும். 158