பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாழ்வு இல்லை டென்ற எண்ணம் பல காலமாகப் பல பெரியவர்களுடைய வாசகங்களால் திண்மையாக இருப்பது, நம்முடைய மனத்தில் சலனம் அடைந்துவிடுகிறது. அந்தச் சலனமற்ற உண்மைகூட நமக்குச் சந்தேகத்தைத் தருவதாக இருக்கிறது. இதற்குக் காரணம் அந்த உண்மையில் உள்ள குறை அன்று; நம்முடைய மனத்தில் உள்ள சலனமே. சலனத்தையுடைய மனம் நம்மை இழுத்துக் கொண்டு போய் அலைய வைக்கிறது. நாம் வலிமையுடையவர்களாக இருந்து அதனை அடக்கி ஒட்டினால் நம்முடைய விருப்பப்படி அது நடக்கும். - குதிரை நம் மேல் ஏறினால் விபத்து. நாம் குதிரை மேல் ஏறினால் வாகன வசதி. நாம் இப்போது மனம் என்னும் குதிரை யினால் ஏறி மிதிக்கப்பெற்று விபத்திற்கு ஆளாகிக் கொண்டு இருக்கிறோம். அதன் மேலே ஏறி நடத்தி நம்முடைய விருப்பப் படி ஒட்டவேண்டும். அதற்கு என்ன வழி என்று தெரியாத காரணத்தினால் இப்போது தாழ்வை அடைந்து கொண்டிருக் கிறோம். ஒவ்வொரு கணமும் துக்கத்தை அடைகிறோம். இத் தகைய நிலையில் இருக்கும் நம்மைப் பார்த்து அருணகிரியார், ஒரு தாழ்வு இல்லையே என்று உபதேசம் பண்ணுகிறார். மறவாதவர் எந்த நிலையில் தாழ்வு இல்லாத வாய்ப்பு உண்டாகும் என்பதைச் சொல்கிறார். மறவாதவர்க்கு ஒரு தாழ்வு இல்லையே. இங்கும் உடன்பாடாகச் சொல்லாமல் எதிர்மறையாகவே சொல்கிறார். நினைந்தவர்க்கு என்று சொல்வதையே மறவாத வர்க்கு என்று எதிர்மறை வாய்ப்பாட்டினாலே சொல்கிறார். 'வாழ்வு உண்டே' என்று சொல்லாமல் தாழ்வு இல்லையே' என்று சொன்னது போலவே இதுவும் இருக்கிறது. மறத்தல், தாழ்வு உறுதல் என்பன நம்முடைய இயல்புகளாக உள்ளவை. அதனால் அவற்றை நீக்க இந்த வகையில் சொல்கிறார். புத்த கத்தைப் படிக்காமல் குழந்தை அதைக் கிழித்துக் கொண் 179