பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 முதலில் நம் நெஞ்சில் இறைவனுடைய பெருமையும் வரலாறுகளும் இடம் கொள்கின்றன. அப்பால் நாம் போகின், கோயில்களுக்கு நம்மைப்போலவே வருகின்ற பல பக்தர்களின் பழக்கம் உண்டாகிறது; சாது சங்கம் ஏற்படுகிறது. அது அதிகமாகச் சாதுக்களுடைய இயல்பு தோன்றுகின்றது. பக்தர் களும், சாமான்ய மனிதர்களும், சிறந்த நிலையில் உள்ளவர்களும் இன்னார் என்று இனம் கண்டுபிடிக்கும் ஆற்றல் நமக்குக் கிடைக்கிறது. அதனால் சிலருடைய சிறப்பான குணங்களைத் காணுகின்ற பேறும் கிடைக்கிறது. அந்தப் பேற்றைக் காணும் போது நமக்கும் அத்தகைய நிலை வரவில்லையே என்ற ஏக்கம் உண்டாகிறது. இந்த ஏக்கமே ஆர்வமாக மாற, அந்த ஆர்வம் முயற்சிக்குத் தூண்டு கோல் ஆகும். முயற்சி செய்ய வேண்டு மென்ற துடிப்பு உண்டாகும் போது சாதுக்களிலே சிறந்தவர் களைக் கண்டதுபோலச் சிறந்தவர்களுக்குள்ளே சிறந்த குரு நாதனைக் கண்டுபிடிக்கின்ற வாய்ப்புக் கிடைக்கும். இவற்றுக்கு எல்லாம் மூலம் சாது சங்கந்தான். சாதுக்கள் நல்ல இடங்களைச் சார்வார்கள். நல்ல இடம் என்பது கூடமும், ஹாலும், நகரமும் அன்று; ஆண்டவன் கோயில் கொண்டிருக்கிற ஆலயங்களும், திருத்தலங்களுமே ஆகும். ஆக, மூர்த்தி தலம் முதலிய திவ்ய தரிசனத்தால் சாது சங்கம் ஏற்பட்டு, அதனால் நாம் நற்கதி அடையவேண்டுமென்ற ஆசை உண்டாகி, அதனால் அதற்கு வழி காட்டுவார் யார் என்று ஆராய்ச்சி பிறந்து, கடைசி யில் குருநாதனைச் சந்திக்கின்ற வாய்ப்புக் கிடைக்கும். இவற்றை யெல்லாம் எண்ணித் தாயுமானவர் ஒரு கண்ணி பாடியிருக்கிறார். "மூர்த்திதலம் தீர்த்தம் முறையாய்த் தொடங்கினர்க்கு வார்த்தைசொலச் சற்சருவும் வாய்க்கும் பராபரமே" என்று சொன்னார். சிறந்த தலங்கள் இந்த நாட்டில் ஒர் ஊருக்குப் பெருமை அந்த ஊரிலுள்ள வீடுகளாலே அல்ல; விதிகளாலே அல்ல; கோயில்களால்தான். இன்றுகூட அந்த நிலை மாறவில்லை. தலங்களுக்குள் சிறந்தவை என்று சிலவற்றைத் தனியாக எடுத்துச் சொல்கிறோம். இறைவன் எழுந்தருளியிருப்பதனாலேயே 250