பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழனித் திருநாமம் உண்டாகி மீதுர, அதனால் விம்மி விம்மிக் கூத்தாடவில்லை; இனிமேல் நமக்கு ஆபத்து வந்தால் அப்போது தஞ்சமாக வரும் பொருள் ஏது இருக்கிறது? படித்தல் - பலமுறை சொல்லுதல். முடித்தல் - தலைமேற் சூடுதல், முசியாமல் - தளர்ச்சி அடையாமல். இடுதல் - ஈதல்; உணவிடுதலுக்கே பெரும்பாலும் வரும். மிடிக்கின்றிலை: மிடி என்ற பெயரடியாகப் பிறந்த வினை; வறுமையை அடையவில்லை. நடிக்கின்றிலை - கூத்தாட வில்லை. நெஞ்சை உறுப்புடையது போல வைத்துச் சொன்னது இது. தஞ்சம் - பற்றுக்கோடு. இனி என்பது இப்போது என்றும், இனிமேல் என்றும் இருவகையாகவும் கொள்வதற்குரியது. ஏது என்ற வினா இல்லை யென்னும் குறிப்பையுடையது. இப்படியெல்லாம் நடந்தால் முருகன் நமக்குத் தஞ்சமாக வந்து பாதுகாப்பான் என்பது கருத்து.) இது கந்தர் அலங்காரத்தில் 75-ஆவது பாடல். 269