பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-5.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 5 படைக்கலங்கள் பாசம், கதை முதலியனவற்றை எடுத்துக் கொண்டு வருக தாக யமனைப் பற்றிய நினைப்பு வரும்போது அதனை மாற்று வதற்குரிய சிறந்த வீரப்பெருமானாகிய ஆண்டவனை நினை கிறார். ஆண்டவன் திருக்கரங்களிலுள்ள படைக்கலங்களை நினைக்கிறார். பாலன் அரையில் கட்டும் சீராவும் கையில் சிறுவாளும் வேலும் என் சிந்தையவே. "என்னுடைய மனமாகிய பெட்டகத்தில் இருக்கும் ஆயுதங் கள் எவை தெரியுமா? நான் எப்போதும் முருகப் பெருமானுடைய திருவுருவத்தைத் தியானம் பண்ணிக் கொண்டிருக்கிறேன் அவனுடைய ஒவ்வோர் அங்கமும் என் உள்ளத்தில் நிற்கிறது அவன் கையில் உள்ள ஆயுதங்களும் என் அகக்கண்ணில் நிற் கின்றன. அவன் தன் இடையில் உடை வாளைச் செருகி இருக் கிறான். அது எனக்குப் பலமாக இருக்கிறது. அவன் கையில் சிறிய வாளை வைத்திருக்கிறான். அதுவும் எனக்குத் துணையாக வரும். இந்த இரண்டுமே போதும். இந்த இரண்டிலும் தீராத பெரும் பகை வந்ததானாலும் அது எவ்வளவு பெரிய தடையாக இருந்தாலும் அழித்து ஒழிக்கின்ற பெரிய படையாகிய வேல் அவனிடம் இருக்கிறது. பெரிய பெரிய அசுரர்களை அடியோடு அழித்து வென்ற வீரவேல் அது. சீராவும், சிறுவாளும், வேலும் எனக்குத் துணையாக என் நெஞ்சில் எப்போதும் இருந்து கொண் டிருக்கும்போது, நீ எந்தப் படையோடு என்னிடத்தில் வந்தாலும் உய்யமாட்டாய். நீ பிழைத்திருக்க வேண்டுமானால் என் பக்கத் தில் வராமல் அகன்று செல்' என்கிறார்.அருணகிரியார். காலனுக்குக் காலனாகிய ஆண்டவன் தன்னுடைய திருவடி யினால் காலனை உதைத்து அழித்துக் கொன்றான் என்று கதை இருக்கிறது. மார்க்கண்டேயர் திருக்கடவூரில் சிவபெருமானைச் சரணடைந்தார். அப்போது அந்தப் பெருமான் காலனுக்குக் காலனாக எழுந்து நின்று தன் காலால் உதைத்துக் கொன்றான் யமனை. அருணகிரியாரோ மார்க்கண்டேயர் பட்ட பாட்டைப் படவில்லை. அவருக்கு மிக எளிதில் பாதுகாப்புக் கிடைத்திருக் கிறது. முருகப் பெருமானுடைய திருக்கரத்திலுள்ள படைகளை 353