பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 ஆம் பாடல் வரையில் உள்ள ஏழு பாடல்களுக்கு விளக்கத்தைக் 5śITöööT6A)Ħità. சமீபத்தில் ஒரு வடமொழிப் புலவர் முருகனைப் பற்றிப் பேசினார். அப்போது அவர் சிலேடையாக ஒன்றைச் சொன்னார். 'நம்முடைய மனத்தை முருகன் திருவடியில் அர்ப்பணம் செய்ய வேண்டும். அவன் பாதங்களில் மலரை இட்டு அர்ச்சனை செய் வதற்கு அதுதான் தாத்பர்யம். ஸுமனஸ் என்பதற்கு நல்ல மனம் என்றும் மலர் என்றும் இரண்டு பொருள்கள் உண்டு. பகவான் பாதத்தில் ஸ்மனஸை வைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். மனசையும் வைக்க வேண்டும், மலரையும் இட வேண்டும் என்று அந்த வார்த்தைக்கு அர்த்தம் சொல்லலாம்” என்றார். அந்த வடமொழி வித்துவானுக்குக் கந்தர் அலங்காரம் தெரியாது. அவர் இந்தக் கருத்தை எந்த வடமொழி நூலிலிருந்து தெரிந்து சொன்னாரோ அறியேன். ஆனால் அவர் சொற் பொழிவைக் கேட்டபோது எனக்குக் கந்தர் அலங்காரச் செய்யுள் தான் நினைவுக்கு வந்தது. 'தகட்டில் சிவந்த கடம்பையும் நெஞ்சையும் தாளிணைக்கே புகட்டிப் பணியப் பணித்தருளாய்” என்பதில் அருணகிரியார் அந்தக் கருத்தைச் சொல்லியிருக்கிறார். மனமலரை ஆண்டவன் அடியில் இடும் அன்பர்கள் மன மலரையும் இட்டால்தான் அருள் கிடைக்கும் என்பதை அப்பாட்டில் சொல்லுகிறார். இந்தப் பகுதியைத் தொடக்கமாக உடைய பாட்டின் விளக்கம் மனமலர் என்ற பெயரோடு இந்த நூலின் முதல் கட்டுரையாக இருக்கிறது. நெஞ்சை முருகன் தாளிணையில் புகட்டிப் பணி செய்ய வேண்டும் என்ற கருத்தை, 'காட்டில் குறத்தி பிரான்பதத்தே கருத் தைப் புகட்டில் வீட்டில் புகுத மிக எளிதே' (85) என்ற பாட்டிலும் உணர்த்துகிறார். அந்தப் பாட்டின் விளக்கம் “எளிய வழி" என்னும் தலைப்பில் வருகிறது. 4.