பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல வேட்கை கின்ற காரியம் வேள்வி. முனியுங்கவர்கள் செய்கிற செயல் அது. நம்முடைய வாழ்நாளில் நலம் தருவதாகவும், மறுமைக்கு உறுதி தருவதாகவும் இருக்கும் செயல்களையே வேட்க வேண்டும், அல்லாதவற்றை வேட்டால் அவற்றால் துன்பமே உண்டாகும். அருணகிரியார் தம்முடைய நெஞ்சைப் பார்த்து இரங்குவது போலச் சொல்கிறார்; 'நெஞ்சமே, நீ எதை வேட்க வேண்டுமோ அதை வேட்கவில்லையே! ஒன்றையும் வேட்காமல் சும்மா இருந்தாலும் போதுமே! அப்படியின்றி எதை வேட்டால் உனக்கு உய்வு கிடைக்காதோ அதை வேட்கிறாயே!” என்று சொல்கிறார். மனத்திற்கு ஆசைப்படுவது இயல்பு. ஒன்றைவிட்டு ஒன்றைப் பற்றி அதனைத் தன்னுடையது ஆக்கிக்கொள்ள வேண்டுமென்ற ஆசை மனிதனது உள்ளத்தில் நிகழும். இந்த ஆசைதான் பிறப்புக்கு மூல காரணம் என்று பெரியவர்கள் சொல்கிறார்கள். ஆனால் இந்த ஆசை நல்ல பொருள்களிடத்தில் சென்றால் அதன் பயனாக நன்மையே விளையும். ஐம்பொறிகளுக்குரிய நுகர்ச்சியைத் தரும் பொருளிடத்தில் ஆசை உண்டாகிறது. அதை நுகர்ந்தால் அந்த அளவில் ஆசை நிறைவேறாமல் மீட்டும் மீட்டும் வளர்ந்து வருகிறது. அதனால்தான் உலகில் மயலில் ஈடுபட்டவர்களுக்கு எந்தக் காலத்திலும் மன நிறைவு உண்டாவதில்லை. இறைவ னுடைய திருவருளைப் பெற்ற பிறகுதான் மன நிறைவு ஏற்படும். ஆசையும் மன நிறைவும் ஐம்பொறிகளும் தூராக் குழிகளாக இருக்கின்றன. உணவை வயிறார உண்பவனுக்கு அப்போதைக்கு உணவில் ஆசை இல்லாமல் இருக்குமேயொழிய, அடுத்த வேளை மீட்டும் அந்த ஆசை எழும். கண்ணால் பார்க்கும் காட்சியும், காதால் கேட்கும் ஒலியும், மூக்கால் மோந்து பார்க்கும் மணமும் போதும் என்ற அளவில் என்றைக்கும் நமக்குக் கிடைப்பது இல்லை. உலகத் திலுள்ள எல்லாப் பொருள்களையும் நுகர்ந்தாலும் அமர லோகத் திலுள்ள பொருள்களை நுகர வேண்டும் என்ற ஏக்கம் உண்டா கிறது. நூறு ஆண்டுகள் ஒருவன் வாழ்ந்து ஐம்பொறி களின் மூலம் இன்பங்களைப் பெற்றாலும் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் நமக்குக் கிடைக்கவில்லையே என்ற அவாத் தோன்றுகிறது. மன நிறைவு இல்லாதபோது எத்தனை இன்பம் கிடைத்தாலும் மேன் 219