பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 6 என்று இகழ்வதை யாம் ஒருபோதும் செய்ய மாட்டோம். எல்லாவற்றுக்கும் மூலகாரணமான விதி ஒட்டத்தின் வழியே உயிர் இயங்குகிறது என்பதைத் திண்மையாகத் தெரிந்துகொன் டிருக்கிறோம்.” இந்தப் பொருளை வைத்து அவர் பாடினார். 'யாதும் ஊரே யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன; சாதலும் புதுவது அன்றே; வாழ்தல் இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின் இன்னாது என்றலும் இலமே, மின்னொடு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும் மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படுஉம் புணைபோல் ஆர்உயிர் முறைவழிப் படுஉம் என்பது திறவோர் காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின் பெரியேர்ரை வியத்தலும் இலமே! . சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.” இந்தப் பாட்டில் உயிர்நாடியாக இருப்பது, "பேர்யாற்று நீர்வழி படுஉம் புணைபோல் ஆர்உயிர் முறைவழிப் படுஉம்' என்பதுதான். பெரிய ஆற்றினது நீர் ஓட்டத்தின் வழியே தெப்பக் கட்டை மிதந்து செல்வது போல, உயிரானது விதியின் வழியே தான் செல்லும் என்பது அதன் பொருள். இங்கே உயிரைத் தெப்பக் கட்டையாகச் சொன்னவர் விதியை நீரோட்டமாகச் சொன்னார். தண்ணீர் இல்லாமல் இருந்தால் ஆறாகாது. நீர் ஓட்டம் விதிக்கு ஒப்பானது. நீர் ஓட ஓட அது ஒர் வழியை வரையறுத்துக் கொள்கிறது. அதனால்தான் நதிக்கு ஆறு என்ற பெயர் வந்தது. விதி வாழ்க்கையை வரையறுக்கிறது. இந்தப் பாட்டை இப்போது எண்ணியதற்குக் காரணம்: அருணகிரிநாத சுவாமிகள் இதுபோல் ஒரு பாட்டைக் கந்தர் 238