பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-6.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ԼIԱԱ6ԾT வாக்கினால் வரும் குற்றம் வாக்கினால் உண்டாகின்ற குற்றங்கள் நான்கு வகை என்று சொல்லும், நீதி நூல். பிறருடைய உள்ளம் புண்படும்படி பேசுவது, உண்மை அல்லாததைச் சொல்வது, பிறர் இல்லாதபோது அவ ருடைய குறையை மற்றவர்களிடம் எடுத்துச் சொல்வது, எந்தப் பயனும் இல்லாமல் வீண் வார்த்தைகளைப் பேசுவது என்ற இந்த நான்குமே அந்தக் குற்றங்கள். இவற்றை முறையே இன்னா சொல் லுதல், பொய் பேசுதல், குறளை கூறுதல், பயனில சொல்லல் என்று சொல்வார்கள். இந்த நான்கையும் ஒழித்து நாம் பேச வேண்டும். மனிதன் மற்ற உயிர்களுக்குக் கிடைக்காத வாக்கைப் பெற்றிருக்கிறான். அதனால்தான் மற்றப் பிராணிகள் வாய் இல்லாத பிராணிகளாக இருக்க, அவன் வாய் உள்ள பிராணியாக நிற்கிறான். அந்த வாயைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டு மானால் அவன் குற்றம் இல்லாமல் பேசவேண்டும். வாக்கின் பெருமை உலகம் முழுவதும் உள்ள மனிதர்கள் தங்கள் தங்கள் கருத்தைப் பிறருக்கு மொழிகளால் தெரிவிக்கிறார்கள். சில விலங்கினங்கள் தம்முடைய ஒலியினால் தம் கருத்தைத் தெரிவிக் கிறது உண்டு. விலங்கைவிடப் பறவைகள் இன்னும் சிறப்பாகத் தெரிவிக்கும். ஆனாலும் நுட்பமான கருத்துக்களை விரிவாகச் சொல்லுகின்ற ஆற்றல் மனிதனுக்குத்தான் அமைந்திருக்கிறது. சொற்களைச் சொல்வதற்கு ஏற்ற உறுப்புகள் அவனிடம் பொருந்தி இருக்கின்றன. எழுத்தொலி உண்டாவதற்கு இன்றியமையாத கருவிகள் இன்னவை என்று இலக்கண நூல்கள் கூறுகின்றன. மார்பு, கழுத்து, மூக்கு, தலை ஆகிய நான்கு இடங்களிலும் தோன்றி எழுத்துக்கள் இதழ், நாக்கு, பல், மேல்வாய் ஆகிய