பார்வதி திருமணம் 89 கொண்டு கிடப்பவன். என்னை அனுப்புவதற்கும் இந்த முகூர்த் தத்தையே பார்த்தீர்களா? இந்தக் காட்சியைக் காணமல் போகச் சொல்கிறீர்களே !” என்று வருத்தத்துடன் சொன்னார். "உலகத்தவர்கள் ஒரு காலத்தில் ஓரிடத்தில் இருப்பார்கள். நான் அத்தகையவன் அல்லன். நீ பொதிய மலைக்குப் போய் இரு. எனக்கு இங்கே திருமணம் நடக்கின்ற காட்சியை, அதே சமயத்தில் உனக்கு அங்கே காட்டுகிறேன். கூட்டம் இல்லாமல் தனியாக அந்தக் காட்சியைக் கண்டு இன்புறலாம்" என்று இறைவன் அருளினான். அப்போதே டெலிவிஷன் வந்துவிட்டது. "பொதிய மலைக்கு அருகிலுள்ள பாவநாசத்தில் என்னுடைய திருக்கல்யாணக் காட்சியைக் காணலாம்" என்று சிவபெருமான் பணித்தான். அடுத்தபடி அகத்திய முனிவர், "அதற்கு மேலே மற்றொரு குறையுண்டு" என்றார். "என்ன குறை?" என்று இறைவன் கேட்டான். "எனக்குத் தமிழ் தெரியாதே! போகிற இடம் தமிழ் வழங்கும் இடமாயிற்றே!" என்று முனிவர் சொல்ல, மூன்றேமுக்கால் நாழிகைக்குள் இறைவன் தமிழைச் சொல்லிக் கொடுத்தான். சொல்லிக் கொடுத்தவன் மிகமிகப் பெரிய தமிழாசிரியன். கற்றுக் கொண்டவரும் மிகச் சிறந்த முதல் மாணாக்கர்; அந்தக் காலத்துக் கற்பூரம் போலத் திடீரென்று பற்றிக்கொள்ளும் அறிவுச் சிறப்பு உடையவர். சுடரால் கொளுத்துவதற்கு முன்னால் திடீரென்று பிடிக் கும் கற்பூரம்போல அவருடைய அறிவு இருந்தது. இந்தக் காலத்துக் கற்பூரம் அப்படி இல்லை. இந்தக் காலத்திலுள்ள சில மாணவர் களுக்கு இந்தக் காலத்துக் கற்பூரத்தை உவமை சொல்லலாம். அகத்தியர் உடனே புறப்பட்டுப் பொதிய மலைக்கு வந்தார். பூமி சமனாயிற்று. கல்யாணக் காட்சி அவருக்குக் கிடைத்தது. கல்யாணம் எவ்வளவு நாள் நடந்திருக்கும்? நம்முடைய நாட்டில் முன்காலத்தில் ஐந்து நாட்கள் திருமணம் நடக்கும். சிவபெருமானுக்கு, அதிகமாகப் போனால் ஐம்பது நாட்கள் நடந்திருக்கலாம். இறைவன் திருமணக் காலத்தில் எல்லோரும் இமயமலை வந்தக் காரணத்தினால் வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்து போயிற்று; அதைச் சமனாக்கவே அகத்தியர் தெற்கே வந்தார். திருமணம் ஆனவுடன் மீண்டும் அங்கே போகவேண்டும் அல்லவா? ' எப்போது திருமணம் நிறை 12
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/109
Appearance