உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு அவதாரம் 97 இனி வராதே" என்று அவன் சொல்லி அனுப்பினான். தேவர்கள், "எல்லோரும் சேர்ந்து முறையிட்டால் ஆண்டவன் இரங்குவான், வாருங்கள்" என்று சொல்லி யாவரும் புறப்பட்டார்கள். மன்னிய கயிலைமால் வரையின் யாமெலாம் இன்னினி ஏகியே ஈசன் தன்முனம் உன்னருங் காலமொ டுற்ற நம்குறை பன்னுதல் துணியெனப் பலரும் கூறினார். (திருவவதாரம். 24.) [இன்னினி இப்போதே.] கைலை மாமலை சென்று சரியான காலத்தில் எம்பெரு தனி மானிடம் எல்லோரும் சொன்னால் நன்மை உண்டாகும். ஒருவராகச் செல்வதைவிட எல்லோரும் சேர்ந்து சென்றால் எல்லோ ருடைய மனத்தில் உள்ளதையும் புரிந்துகொண்டு அருள் செய் வான்' என்று நினைத்தார்கள். எல்லோரும் நந்திதேவரிடம் சென்று தாங்கள் வந்த காரியத் தைச் சொன்னார்கள். நந்தியும் சிவபெருமானிடம் சொல்ல, உள்ளே அனுப்புக" என்று எம்பெருமான் ஆணையிட, எல்லோ ரும் உள்ளே சென்றார்கள். தேவர்கள் செய்த துதி போனவுடன் எம்பெருமானைத் தேவர்கள் தோத்திரம் செய்யத் தொடங்கினார்கள். புராணங்களில் இப்படி இடையிடையே பல துதிகள் வரும். அவை இறைவனைப் பற்றிய உண்மைகளை நன்கு தெரிவிக்கும். நோக்கினும் துழையிலை ; நுவலு கின்றதோர் வாக்கிலும் அமைகிலை ; மதிப்ப ஒண்கிலை; தீக்கரும் நிலைமையின் நிற்றி; எந்தைநீ ஆக்கிய மாயமி தறிகி லேமரோ. - காலும் காட்சிக்குள்ளும். (திருவவதாரப்.32.) மதிப்ப ஒண்கிலை- (கொக்கினும் கண்ணினால் நினைத்துப் பார்க்கவும் முடியாதவனுக இருக்கிறாய்.நிற்றி-நிற்கிறாய்.) 'உன்னைப் பார்க்க நினைத்தாலும் பார்வையில் அடங்குவது இல்லை. கண் என்னும் பொறியால் உன்னை அளக்க முடியாது. கண்ணினால் பாராததை வாக்கினால் சொல்லலாம். இமாசல மலையைப் பார்க்க 13