திரு அவதாரம் 99 புராணங்களைப் படிப்பதில் தத்துவங்களைத் தெரிந்துகொள்வது மிக மிக அவசியம். இந்தத் தோத்திரப் பாடலில் அழகான தத்து வம் ஒன்றுண்டு. "உனக்கு ஓர் உருவம் கிடையாது. ஒரு நாமமும் இல்லை. நீ ஆயிரம் நாமங்கள் தாங்கி இருக்கிறாய். பல வடிவங்கள் ஏற்றிருக்கிறாய். ஐந்தொழிலையும் ஆற்றுகிறாய். உனக்கு ஒரு தொழிலும் கிடையாது. சும்மா இருக்கிறவன். அப்படி இருந்தும் ஐந்தொழில்களையும் செய்கிறாய். உருவ வழிபாடு பெயர் இல்லாதவன் பல பெயர்களைத் தாங்குவதும், உருவம் இல்லாதவன் பல உருவங்களைத் தாங்குவதும் எதற்காக? நமக்கு இத்தகைய சந்தேகங்கள் உண்டாகின்றன. அதற்கு இந்தப் பாடலில் விடை இருக்கிறது. "உலகத்திலே தோன்றியுள்ள உயிர்க்கூட்டங்கள் எல்லாம் உன்னை உபாசனை செய்து வீடு பேற்றை அடைவதற்கே நீ இவ் வாறு செய்கிறாய்" என்றார்கள் தேவர்கள். மிகவும் வேகமாகச் செல்கின்ற எக்ஸ்பிரஸ்ஸை நாம் நினைத் தால் அதன் வேகந்தான் நமக்கு நினைவுக்கு வருகிறது. ஒரு பாலம் வேலை நடக்கும் இடத்தில்,"ஐந்து மைல் வேகம் என்று பலகை போட்டிருப்பார்கள். அங்கே அந்த வண்டி ஐந்து மைல் வேகத்தில் போகும். கட்டைவண்டி கூட அப்படிக் கணக்காக மெல்லப் போக முடியாது. எக்ஸ்பிரஸ்ஸை நினைத்தால் அதன் வேகம் நமக்கு நினைவு வருகிறதேயன்றி, அது மெல்லவும் போகும் என்பது நினை வுக்கு வருவதில்லை. இக்கரைக்கும் அக்கரைக்கும் பாலம் போட வேண்டிய இடத்தில் வேகமாகச் செல்கிற எக்ஸ்பிரஸ் மெதுவாகவும் போகும் என்ற உண்மை நமக்குத் தெரிகிறது. அப்படி உயிர்க் கூட்டங்களை இக்கரையிலிருந்து அக்கரை சேர்ப்பதற்குப் பாலம் போடுவதற்காக, ஆண்டவன் தனக்கென்று உருவம் இல்லா விட்டாலும் அவர்களுக்காக உருவோடு வருகிறான். தனக்கென்று ஓர் உருவம் இல்லாமல் இருப்பதனால்தான் அவன் பல்வேறு உருவங் களை எடுக்கிறான். நான் ஏன் கார் வாங்கக்கூடாது என்று என்னைச் கிலபேர் கேட்பார்கள். எனக்கென்று ஒரு கார் இருந்தால் அதில்தான் 35
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/119
Appearance