முகவுரை மகாபுராணங்கள் பதினெட்டில் அளவால் பெரியது கந்த புராணம். அது லட்சம் கிரந்தங்களை உடையது என்பர். அதில் ஒரு பகுதி கந்தவேளுடைய வரலாற்றைச் சொல்வது. காஞ்சிபுரம் குமர கோட்டத்தில் அர்ச்சகராக இருந்த ஸ்ரீ கச்சியப்ப சிவசாரியார் கந்தபுராணத்தின் முதல் ஆறு காண்டங்களைப் பாடினார். ஏழாவ தாகிய உபதேச காண்டத்தை இரு வேறு புலவர்கள் பாடியிருக் கிறார்கள். கந்த தமிழில் உள்ள பெரியபுராணம், கந்தபுராணம், திருவிளையாடற் புராணம் என்ற மூன்றும் சைவர்களால் பெரிதும் போற்றப்படுபவை. இலக்கிய நயமும் பக்திச் சுவையும் செறிந்தவை அவை. புராணம் பாராயண நூலாகவும் விளங்குகிறது. கந்த சஷ்டி விழா ஆறு நாளும் இந்த நூலை ஓதி வருகின்றவர் பலர் தமிழ் நாட்டில் உள்ள அன்பர்களைவிட யாழ்ப்பாணத்திலுள்ள அன்பர்கள் இந்த நூலைப் பாராயணம் செய்வதிலும் பொருள் சொல்வதிலும் மிகுதி யாக ஈடுபடுகிறார்கள். முருகனுடைய வழிபாடும், திருத்தலங்களும் தமிழ் நாட்டில் மிகுதி. வடநாட்டினர் கார்த்திக் என்று அந்தப் பெருமானை வழிபடுவார்கள். அருணகிரியார் பாடிய நூல்கள் முருகப்பெரு மானுடைய பெருமையை விரிவாகச் சொல்கின்றன. கந்த புராணத்தைப் படித்து இன்புறுகிறவர்கள் முருகனுடைய திருவ வதாரத்தையும் திருவிளையாடல்களையும் அறிந்து நலம் பெறுகிறார்கள். கந்தபுராணத்தின் சுருக்கம் ஒன்றைத் தனி நூலாகச் சம்பந்த சரணாலயர் என்னும் முனிவர் பாடியுள்ளார். அதிலிருந்து கந்த புராணத்தின் வியாபகம் தெரிய வரும். அமரர் சி.கே.சுப்பிரமணிய முதலியார் கந்தபுராணக் சுலிவெண்பா என்ற நூலை இயற்றி இருக்கிறார். குமர குருபர முனிவர் முதல் முதலில் அருளிய கந்தர் கலி வெண்பாவில் முருக வேள் வரலாறு சுருக்கமாக வருகிறது. கந்தபுராணம் சொற்சுவை பொருட்சுவை நிரம்பியது ; அந்தத் திறத்தில் கம்பராமாயணத்துக்கு அடுத்தபடியாக இதைச் சொல்ல
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/13
Appearance