திரு அவதாரம் 113 ஆட்கொள்வதற்காகத் தானும் பஞ்சபூத சம்பந்தம் உடையவனாக எழுந்தருளுகிறான்./ சிவபெருமானாகிய ஆகாசத்தில் தோன்றி, வாயு வாலும் அக்கினியாலும் தாங்கப்பட்டு, கங்கை என்னும் அப்புவின் தொடர்பையும் பெற்று, சரவணப் பொய்கையின் நடுவில் திட்டாகிய பிருதிவியில் வந்து அமர்கிறான். இது ஆண்டவனுடைய பஞ்சபூத சம்பந்தம் நமக்கெல்லாம் சிறிய அளவில் பஞ்சபூத சம்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இறைவனுக்கோ பஞ்சபூதங்களேயான மூர்த்திகளோடு அகண்டமான சம்பந்தம் உண்டாயிற்று. இவ்வாறு வாயுவும் அக்கினியும் கங்கையில் ஆறு பொறிகளை விட, கங்கை சரவணப் பொய்கையில் கொண்டுபோய் விட்டவுடன் கப் பெருமான் திரு அவதாரம் செய்தான். அவதாரம் முருகன் அவதாரத்தைச் சொல்கிற பாட்டு மிகவும் அருமை யானது. அருவமும் உருவும் ஆகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப் பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி யாகக் கருணைகூர் முகங்க ளாறும் கரங்கள்பன் னிரண்டும் கொண்டே ஒருதிரு முருகன் வந்தாங் குதித்தனன் உலகம் உய்ய (திருவவதாரப்.92.) கருணைகூர் என்ற தொடரில் கூர் என்பது உள்ளது சிறத்தல் என்பதைக் காட்டும். கூர்தல் உள்ளது சிறத்தல்" என்பது தொல்காப்பியம். சிவபெருமான் அருள் வடிவமாக இருக்கிறவன். அவனிடத்தில் நிரம்பக் கருணையிருக்கிறது. அவன் ஐந்து முகமும், பத்துக் கரங்களும் கொண்டவன். ஆனால் அந்த அருளை இன்னும் பல உயிர்கள் பெறவில்லை. 15
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/133
Appearance