திரு அவதாரம் மறைகளின் முடிவால் வாக்கால் மனத்தினால் அளக்கொ ணாமல் நிறைவுடன் யாண்டு மாகி நின்றிடும் நிமல மூர்த்தி அறுமுக உருவாய்த் தோன்றி அருளொடு சரவ ணத்தில் வெறிகமழ் கமலப் போதில் 115 வீற்றிருந் தருளி னானே. (திருவவதாரப்.86.) [வெறி கமழ் - மணம் வீசுகின்ற] வேதங்களாலும் ஆகமங்களாலும் அறிதற்கு அரியவுன் ஆண்டவன். அருமறைக் கறிவரும் அவனை 31 (கம்பராமாயணம்) என்றார் கம்பர். வேதங்கள்,ஐயா எனஓக்கீ ஆழ்ந்தகன்ற நுண்ணியனே P. >> என்றார் மாணிக்கவாசகர். பரஞ்சோதியார் ஒன்று சொல்கிறார். வேதம் இறைவனைச் சுட்டிக் காட்டுவது இல்லையாம். E அல்லையி தல்லையீ தென்றரு மறைகளும் அன்மைச் சொல்லி னால்துதித் திளைக்கும் இச் சுந்தரன்" என்று அவர் பாடுவார். நீ இந்தப் பொருள் அல்ல; இந்தப் பொருள் அல்ல' என்று வேதம் சொல்கிறதே யன்றி இதுதான் என்று சுட்டிச் சொல்ல வில்லையாம். இங்கே நமக்கு ஒரு சந்தேகம் தோன்றும். வேதந்தானே நம் மதத்திற்கு அடிப்படையான நூல்? அதுதானே இறைவனை நமக்குக் காட்டுகிறது? அதுவே இறைவனைக் காண முடியாது என்றால் அந்த வேதத்தை நம்பி நமக்கு என்ன பயன்? இவ்வாறு ஐயம் தோன்றலாம். தத்துக்குடியிலிருந்து திருநெல்வேலிக்குப் போகிறபோது சாலைகள் சில கூடும் இடத்தில் திருநெல்வேலி என்று பெயர் எழுதிய கைகாட்டி மரம் ஒன்று இருக்கிறது. வேறு கைகாட்டிகளும் உள்ளன. அந்தக் கைகாட்டியின் நீளம் இரண்டு.
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/135
Appearance