118 கந்தவேள் கதையமுதம் பெறுவதற்காக என்பது இதனால் புலப்படும். அந்த ஆறு குழந்தை களும் பல வகையான விளையாட்டுக்களைக் காட்டி மகிழ்ச்சியைக் கொடுத்தார்கள். ஆடஓர் உருவம், செங்கை அறையஓர் உருவம்,நின்று பாடஓர் உருவம், நாடிப் பார்க்கஓர் உருவம், ஆங்கண் ஓஓர் உருவம், ஓர்பால் ஒளிக்கஓர் உருவம், யாண்டும் தேடஓர் உருவமாகச் சிவன்மகன், புரித லுற்றான். செங்கை அறைய சொல்வார்கள்.] திருஅவதாரப். 131.) கைகளைக் கொட்ட; சப்பாணி கொட்டல் என்று இதைச் இந்தப் பாட்டில் ஏழு உருவங்கள் வருகின்றன. யாண்டும் தேடவோ ருருவ மாகச் சிவன்மகன் புரித லுற்றான் என்பதில் உள்ள உருவத்தைச் சிவனுக்கு அடை ஆக்க வேண்டும். ஓர் உருவம் ஆகு அச்சிவன் என்று பிரிக்கவேண்டும். பொதுவாகப் பார்த்தால் ஏழு உருவமாகச் சிவன் மகன் விளையாடல் செய்தான் என்று தோன்றும். ஆனால் ஏழாவது உருவத்தைச் சிவனுக்கு ஏற்றிப் பொருள் செய்தால் ஆறு உருவங்களே நிற்கும். 'திருமால் முதலியோர் எங்கும் தேடும்படியாகச் சுடருருவம் ஆகும் அந்தச் சிவன் என்று பொருள் கொள்ளவேண்டும். இப்படி மயக்கம் வரும்படியாகப் பாடுவது புலவர் இயல்பு மயக்கம் தெளிந்தால் இன்பம் மிகுதியாகும்.
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/138
Appearance