உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 கந்தவேள் கதையமுதம் தில் ஓலையும், வலப்பாகத்தில் திருநீறும் இடப்பாகத்தில் பசுஞ்சாந்தும், வலப்பாகத்தில் சூலமும் இடப்பாகத்தில் கிளியும் அமைந்த பழைய திருக்கோலம் இது. படைப்புக் காலத்தில் இவ்வாறு ஆண்டவன் மாதிருக்கும் பாதியன் ஆகிறான்; ஆதலின் தொன்மைக்கோலம் என்றார். இதைப் பழைய சங்க நூலாகிய ஐங்குறுநூறு சொல்கிறது. ஆண்டவன் முதலில் உலகத்தை எல்லாம் படைப்பதற்கு முன் தனக்கு உருவத்தைப் படைத்துக் கொண்டான்; தான் வடிவம் உடையவன் ஆனான். அந்த வடிவத்தில் ஒரு பாதி சக்தி, ஒரு பாதி தானாக இருந்தான். J "நீல மேனி வாலிழை பாகத்து ஒருவன் இருதாள் நிழற்கீழ் மூவகை உலகும் முகிழ்த்தன, முறையே.' நீல மேனியை உடைய அம்பிகையை ஒரு பாகத்தில் உடையவன் பெருமான். அவனுக்கு இரண்டு தாள். அந்தத் தாள்களின் நிழலில் அந்தர் மத்திய பாதலம் என்ற மூன்று உலகமும் தோன்றின என்று. சொல்கிறார். அரையும் அரையும் சேர்ந்த ஒன்று, அதிலுள்ள இரண்டு தாள்கள், அங்கிருந்து மூன்று உலகமும் தோன்றின என்று எண் அலங்காரம் வரும்படியாகப் பாடுகிறார் பாரதம் பாடிய பெருந் தேவனார் என்ற புலவர். மூவகை உலகும் என்பதற்கு, சிவ தத்துவம், வித்யா தத்துவம், ஆன்ம தத்துவம் என்றும் சொல்லலாம். அம்பிகை அருளினால்தான் உலகம் விளங்கும். இன்றேல் உலகம் வடிவு எடுக்க முடியாது. சமைக்க வேண்டிய பொருள்களை எல்லாம் ஆடவன் கொண்டுவந்து போட்டாலும், அதைப் பக்குவப் படுத்தி உண்ணும்படியாகச் சமைப்பவள் தாய். அதுபோல் உயிர்க் கூட்டங்களுக்கு அவரவர்கள் வினைக்கு ஏற்ப அனுபவம் உண்டாகும் படியாக அருள் செய்வது அன்னையின் செயல். பரமேசுவரனது ஞானக் கண்ணிலிருந்து எழுந்தருளிய முருகன் பாராசக்தியின் அணைப்பினால் உலகத்திற்கு அருள் புரிகின்ற பேர் ஆற்றலைப் பெற்றான். அவள் அணைத்தவுடன் அவனுடைய ஆறு வடி வமும் ஒரே வடிவமாயின. முன்பே பரமசிவ குமாரனாக இருந்தவன் இப்போது சிவ சக்தி குமாரனாக ஆகிவிட்டான். முன்பு நுட்பமாக