xiv கந்தவேள் கதையமுதம் இலக்கிய நயங்களையும் உள்ளுறையையும் தத்துவக் கருத்துக்களையும் எனக்குத் தெரிந்த வரையில் அங்கங்கே எடுத்துச் சொல்லியிருக்கிறேன். இந்தப் புத்தகத்தைப் படிக்கிறவர்கள் கந்தபுராணக் காப்பியத்தைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைப் பெற வேண்டும் என்பது என் கருத்து. பக்தியும் தமிழும் மணக்கும் இந்தத் தெய்விக நூலைப் பொதுவாகத் தமிழ் இலக்கியம் பயிலுபவர்களும், சிறப்பாக முருகன் அடியவர்களும் படித்துப் பயன் பெற வேண்டும். அத்தகைய எண்ணத்தைத் தூண்ட இந்தப் புத்தகம் உதவுமானால், இதை வெளியிட்டதன் பயனைப் பெற்றதாக எண்ணுவேன். பெரிய நூல்களைப் படித்துணர்வதற்குரிய ஊக்கம் இப்போது குறைந்து வருகிறது. சொற்பொழிவுகளைக் கேட்கும் ஆர்வம் நூல்களைப் படிப்பதில் மக்களுக்கு இருப்பதில்லை. இந்த நிலை நீடித்து வருமானால் பெரிய நூல்கள் படிப்பாரற்று, பதிப்பிப்பாரும் இல்லாமல் நாளடைவில் மறந்து போகும்; மறைந்தும் போய் விடும். அந்த நிலை வராமல் இறைவன் காப்பாற்ற வேண்டும். இந்த நூலிலுள்ள விரிவுரைகளை ஆற்றும்படி தூண்டிய திரு ஏ.பி.சி.வீரபாகு அவர்களிடம் மிக்க நன்றி பாராட்டு கிறேன். இதை மீட்டும் சுருக்கெழுத்தில் எழுதித் தட்டெழுத்தில் வடித்துத் தந்த திரு அனந்தனுக்கு என் நன்றி அறிவைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதை நல்ல முறையில் அச்சிட்டுதவிய சென்னை ஹிந்திப் பிரசார அச்சுக் கூடத்தாரை நான் பாராட்டி நன்றி கூறுகிறேன். முருகனுடைய திருவருளும் என் ஆசிரியப் பிரானாகிய மனை மகோபாத்தியாய டாக்டர் ஐயரவர்களின் ஆசியும் ள்ளி யேனுக்கு எப்போதும் துணையிருந்து தமிழ்த் தொண்டை ஆற்றும் நான் செய்கின்றன என்பதை கணந்தோறும் படி வழுத்துகிறேன். முருகன் திருவருள் நினைவு எங்கும் பரவுவதாகுக! 'காந்தமலை' சென்னை 28 நினைந்து கி.வா.ஜகந்நாதன் 18-2-1880
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/16
Appearance