உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 கந்தவேள் கதையமுதம் அவன் இவ்வாறு திருவிளையாடல் செய்தபோது எல்லோரும் பார்த்து அஞ்சினார்கள். அவன் மலைகளோடு மலைகளை மோதிப் பிறர் வியக்கும்படியாகப் பல திருவிளையாடல்களைச் செய்தாலும் எந்த உயிருக்கும் சேதம் உண்டாக்கவில்லை. இப்படி எல்லாம் விளையாடுகிற முருகனைப் பற்றிப் பரமேசு வரன் அம்பிகைக்குச் சொல்லத் தொடங்கினான். நன்முகம் இருமுன் றுண்டால் நமக்கவை தாமே சுந்தன் தன்முக மாகி உற்ற ; தாரகப் பிரம மாகி முன்மொழி கின்ற நந்தம் மூவிரண் டெழுத்தும் ஒன்றாய் உள்மகன் நாமத் தோரா றெழுத்தென உற்ற அன்றே. (திருவிளையாட்டும். 18.) (தாரகப் பிரமம் - பிரணவம் ] நமக்கு ஐந்து முகம் வெளிப்படையாக இருக்கின்றன. அதோடு கீழ்நோக்கும் அதோமுகம் ஒன்றுண்டு. அந்த ஆறு முகங் களும் சேர்ந்தே, ஆறுமுகங்களாகப் பெற்று நம்முடைய குழந்தை உண்டானான். நான் வேறு, அவன் வேறு அல்ல. பஞ்சாட்சரத்தில் ஓம் என்ற பிரணவம் சேர்ந்தால் ஆறு எழுத்து அமையும். அந்த ஆறு எழுத்துக்களே முருகனுடைய ஆறு எழுத்துக்களாக வந்தன. அவனைக் குழந்தை என்று எண்ணாதே. நம்மிடத்திலுள்ள எல்லாச் சக்தியும் அவனிடத்தில் உள்ளன. நீயும் நானும் சேர்ந்த வனே அவன்.நாம் எங்கும் இருப்பதுபோல அவனும் எங்கும் நிறைந்துள்ளான். பிரம்மானந்த சொரூபியாக உள்ளவன். அவனுக்கு உலகத்தில் நடக்கின்ற எல்லாம் தெரியும். அவன் சர்வக்ஞன். யார் யார் தன்னை வணங்குகிறார்களோ அவர்களுக்கு என்போலவே எல்லாப் போகங்களையும் இம்மையில் அருள்வான் ; அழிவு இல்லாத வீடு பேற்றையும் அளிப்பான்.' இப்படிச் சிவபெருமான் முருகப் பெருமானின் பெருமைகளை எடுத்துச் சொன்னான். ஆதலின் நமது சத்தி அறுமுகன் ; அவனும் யாமும் பேதகம் அன்றால்; தம்போல் பிரிவிலன்; யாண்டும் நின்றான்; ஏதம்இல் குழவி போல்வான்; போதமும் அழிவில் வீடும் யாவையும் உணர்ந்தான் ; சீரும் போற்றினர்க் கருள வல்லான். (திருவிளையாட்டுப்.19.) (பேதகம் - வேற்றுமை. ஏதம் - தீங்கு. போதம் - ஞானம்.]