குமர குருபரன் 159 அவன் நாவில் கலைமகள் இருக்கிறாள் என்பது அவன் படைப்பதற் குரிய அறிவு உடையவன் என்பதைக் காட்டும். கலைஞனின் படைப்புக்கும், தொழிலாளியின் படைப்புக்கும் வேறுபாடு உண்டு. தொழிலாளி ஆயிரம் படைத்தாலும் எல்லாம் ஒரே மாதிரி இருக்கும். ஆனால் கலைஞன் படைப்பில் ஒவ்வொன்றும் தனித்தனி அழகோடு இருக்கும். ஒரு சங்கீத வித்துவான் ராகம் ஒன்றைப் பாடுகிறார். வெவ் வேறு இடத்திற்குச் சென்று அந்த ராகத்தைப் பாடினார் என்றாலும் ஒவ்வோர் இடத்திலும், அந்த அந்தச் சமயத்திற்கு ஏற்றபடி மனோ தர்மம் வேறாக இருக்கும். இதுதான் கலைஞனது திறமை. பிரமன் சிறந்த கலைஞன் என்பதை அவனது படைப்பினால் தெரிந்து கொள்ளலாம். உலகத்தில் இதுவரைக்கும் எத்தனையோ கோடி மனிதர்கள் பிறந்திருக்கிறார்கள். எல்லா மக்களுடைய முகமும் ஒரே மாதிரி இருப்பது இல்லை. முகத்தினுடைய அமைப்பு ஒன்றாகவே இருக்கிறது. கண், மூக்கு,வாய்,முதலிய உறுப்புகள் அந்த அந்த இடங்களில் அமைந்திருந்தாலும் ஒரு மனிதனைப் போல மற்றொரு மனிதன் இருப்பதில்லை. இத்தகைய அமைப்பு, பெரும் கலைஞனாகிய பிரமனால் அமைகிறது.
- 4
கலைமகளைப் பிரமன் படைத்து அவளை மணந்து கொண்டான் என்று புராணம் சொல்கிறது. இதைச் சிலர் குறை சொல்லிப் பரி காசம் செய்வார்கள்; பிரமன் தான் பெற்ற மகளையே மணந்து கொண்டான் என்றால் வெட்கமாக இல்லையா? இப்படி ஒரு மதம் உண்டா?" என்று பரிகாசம் செய்வார்கள். ஒரு பெரிய சங்கீத வித்துவான் ஓர் ஊரில் பாட்டுக் கச்சேரி நடத்தினார். எங்கே கச்சேரி நடந்தாலும் அவருடைய நண்பர்கள் வந்து கூடுவார்கள். கச்சேரி முடிந்த பிறகு, உட்கார்ந்து, வெற் நிலை பாக்குப் போட்டுக்கொள்ளும்போது, அவரிடம் பலர் வந்து, "இன்றைக்கு நீங்கள் இன்ன ராகம் பாடினீர்களே; மிக அற்புத மாக இருந்தது; இன்ன கீர்த்தனம் மிகவும் இனிமையாக இருந்தது" என்றெல்லாம் சொல்வார்கள். அதைக் கேட்டு மகிழ்வார் அந்த வித்துவான்,