166 கந்தவேள் கதையமுதம் தள்ளியதாக அங்கே வருகிறது. சூரசங்காரம் ஆன பிறகு முருகப் பெருமான் தன்னுடைய கையிலுள்ள வேலைப் பார்த்து, "இந்த வேல்தான் வெற்றியை வாங்கித் தந்தது" என்று சொன்னான். அது உபசாரத்திற்காகச் சொன்ன வார்த்தை. பக்கத்தில் இருந்த பிரமன், "அந்த வேலை நான்தானே செய்து கொடுத்தேன் ?"" என்று அகங்காரத்தோடு பேசினான்; உடனே எம்பெருமான் அவனைச் சிறையில் அடைத்தானாம். பிரமன் சிறையில் அடைபட்ட வுடன் மற்றவர்களுக்கு வேலை இல்லாமல் போய்விட்டது. தேவர் செயல் ஒரு பணக்காரர் பெரிய திருமாளிகை ஒன்றைக் கட்ட நினைத் தார். அஸ்திவாரம் போடுவதற்கு ஓர் என்ஜினியர், கட்டிடத்தை எழுப்ப ஓர் என்ஜினியர், மேல்மாடி கட்ட ஓர் என்ஜினியர் என்று இப்படிப் பல என்ஜினியர்களுக்குக் காண்ட்ராக்ட் கொடுத்தார்; முன் பணமும் கொடுத்து விட்டார். அஸ்திவாரம் போடுகிற என்ஜி னியருக்கு உடல் நலம் இல்லாமல் போய்விட்டது. அதனால் கட்டிட வேலை தாமதமாயிற்று. ஒரு நாள் அவருடைய மைத்துனன் வந் தான். அவனிடம் இந்தச் செய்தியைச் சொன்னபோது அவன் கேட்டானாம்; "அஸ்திவாரம் போடுகிற என்ஜினியருக்கு உடல் நலம் சரியில்லையானால் மற்றவர்களுக்கு என்ன? மற்றவர்கள் தங்கள் தங்கள் வேலைகளை முடிக்கக்கூடாதா?" என்றானாம். அதைக் கேட்டுச் சிரிப்பதா? அழுவதா? எல்லாவற்றுக்கும் மூலமான அஸ்திவாரம் இல்லாவிட்டால், மற்ற என்ஜினியர்கள் எவ்வளவு சாமர்த்தியசாலி களாக இருந்தாலும், எப்படி அவர்களால் வேலை செய்யமுடியும்? அடிப்படையான படைப்பே இல்லாமல் போய்விட்டது, நான் முகன் சிறையில் இருந்ததனால். அதனால் மற்றவர்களுடைய காரியங் களும் நடைபெறவில்லை. விஷ்ணு,ருத்திரன் ஆகியோருக்கு வேலை இல்லாமல் போய்விட்டது. அதனால் மற்றவர்கள் வருந்தித் தங்கள் தொழில் முறையாக நடைபெறவேண்டு மென்ற எண்ணத்தினால் நான்முகனைச் சிறையிலிருந்து மீட்க வேண்டுமென்று விரும்பினார்கள்; முருகப் பெருமானிடத்தில் விண்ணப்பித்துக்கொள்ள முயன்றார்கள். வந்து
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/186
Appearance