குமர குருபரன் 189 படித்து முன்னுக்கு வந்துவிட்டான் " என்று சொல்லிச் சொல்லிப் பெருமைப்படுகிறான். இது மனிதனுடைய இது மனிதனுடைய இயல்பு. இதைப் போலவே சிவபெருமானுக்கும் தன் பிள்ளை சொன்னதைக் கேட்ட போது மகிழ்ச்சி உண்டாயிற்று. அயனைச் சிறை விடுதல் £6 க உடனே சிவபெருமான் இடப வாகனத்தின் மேலேறி, உமா தேவியுடன் முருகன் இருக்கும் இடம் சென்றான். முருகன் செய்தது தவறு என்று ஆண்டவன் நினைத்திருந்தால், தானே அங்கே போயிருக்கமாட்டான். அவனை அழைத்து வா இங்கே" என்று சொல்லியிருப்பான். "பிரமனைப் போல இருந்து நம் பிள்ளை படைப்புத் தொழிலைச் செய்கிறானாம். நாமே போய்ப் பார்க்கலாம். வா" என்று உமாதேவியையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டான். 69 சிவபெருமான் வந்தவுடன் அவளை வணங்கி, ஆசனம் தந்து, வந்த காரணம் என்ன ?" என்று கேட்டான் முருகன். பிரமனை நீ சிறையில் இட்டாயாம். அவனைச் சிறையிலிருந்து விடுவிப்பதற்காக நான் இங்கே வந்தேன். அவனை விடுதலை செய் " என்று இறைவன் சொன்னான். முருகப் பெருமான், "பிரணவத்தின் பொருள் தெரியாமல் இருக்கிறான் அவன். அவன் எல்லா உயிர்களையும் படைக்கிறான் என்பது பைத்தியக்காரத்தனம் அல்லவா? அவன் எல்லா வேதங் களும் தெரிந்தவன் என்று சொல்லிக்கொண்டான். வேதத்தின் முதல் எழுத்தின் பொருளையே தெரிந்துகொள்ளவில்லையே! மற்றவற்றை எப்படித் தெரிந்துகொண்டிருப்பான்? அவன் பூஜை பண்ணியதனால் நீங்கள் மிகவும் மகிழ்ந்து, அவனுக்கு இந்த உத்தி யோகத்தைக் கொடுத்துவிட்டீர்கள். அவன் இந்தத் தொழிலைச் செய்வது என்பது பேதைமை. இது வெகு அழகாக இருக்கிறது " என்று முருகன் சொன்னான். அழகி தையதின் ஆரருள் ! வேதம்முன் மொழிய நின்ற முதலெழுத் தோர்கிலான்; இழிவில் பூசை இயற்றலும் நல்கிய தொழில்புரிந்து சுமத்தினை யோர்பரம். (பரம் -பாரம்.] [அயனைச் சிறை சீக்கு.26.) 22
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/189
Appearance