உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமர குருபரன் $75 அருணகிரிநாதர் கூறுவார். அறியாதவனுக்கு அறியும்படி செய்கிற உபதேசம் அன்று இது. சிவபெருமானுக்குப் பிரணவப் பொருள் தெரியாதா? ஆசிரியன் தன் மாணாக்கனைக் கேள்வி கேட்க, அவன் பதில் சொல்லும்போது ஆசிரியன் மகிழ்ச்சி அடைகிறான். தனக்குத் தெரியாததைக் கேட்டு, மாணாக்கன் சொன்னதனால் தெரிந்து கொண்டான் என்பது அல்ல. இதை அறிவினா என்று சொல்வார்கள். சிவபெருமான், முருகன் தன் காதில் சொன்ன உபதேசத்தைக் கேட்டான்; அவனுக்கு ஒரே ஆனந்தம். அது தன்னுடைய குழந்தை யின் மழலைச் சொல்லாகவும் இருந்தது அல்லவா? "குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர் לו என்று வள்ளுவர் சொல்வார்.. ஆகவே இரண்டு வகையான மகிழ்ச்சி சிவபெருமானுக்கு ஏற்பட்டது. அதைக் கேட்டு ஒரு காது மாத்திரம் குளிர்ந்ததைக் கண்டு, அவன் தன் மறு காதும் அந்தக் குளிர்ச்சியைப் பெறவேண்டுமென்று எண்ணினான். வலக் காது அவனுடையது, இடக்காது உமையினுடைய காது அல்லவா? தன் குழந்தையின் மழலைச் சொல்லைக் கேட்ட தகப்பன், தன் மனையாட்டியை அழைத்து, "இதோ பார், உன் குழந்தை எப்படிப் பேசுகிறான் பார்!" என்று சொல்லி மகிழ்ச்சி அடைவான். அது போல வலக்காதில் உபதேசம் கேட்ட சிவபெருமான்,இடக் காதிலும் அவனைச் சொல்லச் சொல்லிக் கேட்டான், < சிவனார் மனம்குளிர உபதேச மந்த்ரம் இரு செவிமீதி லும்பகர்செய் குருநாதா என்று அருணகிரியார் பாடுகிறார். இரண்டு காதும் முருகப் பெருமான் சொன்ன மழலை உபதேசத்தால் குளிர்ந்துவிட்டன. ஆனந்தம் பொங்கியது சிவபெருமானுக்கு. து அருணகிரிநாதப் பெருமான் முருகன் திருவருளால் பதினாறாயிரம் திருப்புகழ்ப் பாடலைப் பாடினார். "நீ என் புகழைப் பாடுவாயாக என்று சொல்லி அதற்கு வேண்டிய ஆற்றலை முருகன் வழங்கினான். எப்படித் தொடங்குவது என்ற எண்ணம் அருணகிரியாருக்கு