உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 கந்தவேள் கதையமுதம் முந்தும் இன்னமு தக்கொடி, மூவுல கேத்தும் இந்தி ரன்மகள் ஆகியே வளர்ந்தனை இருத்தி; சுத்த ரிப்பெயர் இனையவள், தொல்புவி தன்னில் அந்தண் மாமுனி புதல்வியாய் வேடர்பால் அமர்தி. (விடை பெறு. 5.) [ அமுதக்கொடி, இளையவன், விளி.] பிறகு முருகப் பெருமான் தன்னுடைய இருப்பிடமாகிய கந்த கிரிக்குச் சென்றான். தேவர்கள் சண்முகநாதனின் பெருமையைப் பின்னும் நன்றாக உணர்ந்துகொண்டார்கள்; அவனது விசுவரூபத்தினாலும், அனுக்கி ரகத்தினாலும் நல்ல தெளிவைப் பெற்றார்கள், அவன் பரமேசுவர னுக்கே ஞானகுருவாக இருந்தான் என்ற செய்தியைக் கேட்டு, அவனைப்போலத் தலைவனும், வீரனும், கருணாமூர்த்தியும், ஞான மூர்த்தியும் வேறு இல்லையென்று தெளிந்து அவனைப் போற்றிக் கொண்டிருந்தார்கள். உள்ளுறை முருகப் பெருமான் பிரமனைச் சிறையில் இட்டான் என்ற கதையைப் பார்த்தோம். அந்தக் கதையில் ஒரு கருத்து அமைந் திருக்கிறது. முருகப் பெருமான் செய்த நாடகம் அது. மனிதர் களுக்கு இறப்பும், பிறப்பும் மாறி மாறி வரும். இறப்பைவிடப் பெரிய துன்பம் வேறு இல்லை. பிறப்பும் அத்தகையதே. காரைக் கால் அம்மையார் இறைவனிடத்தில் கேட்டது, "பிறவாமை வேண்டும் என்பதுதான். திருவள்ளுவரும், " வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை" என்கிறார். அடுத்தடுத்துப் பிறவிகள் வருவதனால் பிறவிக்குக் கடலை உவமை சொல்கிறார் வள்ளுவர். பிறவியை யார் அறுக்கிறாரோ அவரே முத்திக்கரையைக் காண்பார். " இந்தப் பிறவியை உண்டாக்குபவன் பிரமன். இந்த உடம்பைப் படைப்பவன் அவன். உடம்பாகிய சிறையில் உயிர்களை இடுகிறவன் அவன். அவனையே முருகப் பெருமான் சிறையில் வைத்தான். முருகப் பெருமான் தன்னை நம்பியவர்களுக்குப் பிறவியே சாராமல் செய்வான் என்பதுதான் இந்தக் கதையின் உட்பொருள்.