உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாரகன் வதை 187 பிளந்தது. இவ்வாறு தன் தண்டத்தால் ஆயிரம் வெள்ளம் சேனையை அழித்தான். எட்டுத் திக்குகளும் கிழிந்தன. கருடக் கூட்டத்தைக் கண்ட பாம்புகள் சிதறி ஓடி அழிவதைப்போலப் பூதகணங்கள் அழிந்தன. எதிர்த்த பூதகணங்களை எல்லாம் தாரகன் பூமியிலே வைத்துத் தேய்த்தான். அவனை நோக்கி நவவீரர்களும் பூதகணங்களும் விட்ட அம்புகள், ஆலங்தட்டி மழை பெய்யும் போது கீழே விழுந்து சிதறும் பனிக் கட்டிகளைப் போல அவன் மார்பில் பட்டுச் சிதறின. தாரகன் தன் ஒரு கையால் லட்சம் வீரர்களையும் வளைத்துப் பிடித்துக் கடலில் கொண்டுபோய்ப் போட்டான். இதைக் கண்ட நவவீரர்களுள் ஒருவனான வீரகேசரி நூறு அம்புகள் விட்டுத் தாரகனின் முடியை வீழ்த்தினான். சினத்தோடு தன்னுடைய முடியைத் தரித்துக்கொண்ட தாரகன் மறுபடியும் தன் தண்டத் தைச் செலுத்தினான். அந்தத் தண்டம் வீரகேசரியின் மார்பைத் தாக்க, அவன் மயங்கி வீழ்ந்தான். தன் தம்பி வீரகேசரி தாரகாசுரன் விட்ட தண்டத்தால் மயங்கி வீழ்ந்தான் என்பதைக் கேள்விப்பட்ட வீரவாகு தேவர் சினத்தோடு யுத்த களத்திற்கு வந்து சேர்ந்தார். அவரைப் பார்த்துப் பரிகாச மாகச் சிரித்தான் தாரகன். 'திருமால் ஏவிவிட்ட சக்கராயுதத்தை நான் என் மார்பில் அணிந்து இருக்கிறேன். அத்தகைய என்னையா எதிர்க்க வந்தாய்?" என்று கேட்டான். "சிங்கத்தைச் சிறு நரி வெல்ல முடியுமானால், என்னையும் உன்னால் வெல்ல முடியும்" என்றான். மாயன் றனைவென் றவன்றேமியை மாசில் கண்டத் தேயும் படியே புனைந்தேன்வலி எண்ணு றதே நீயிங் கடுவாம் எனக்கூறினை, நீடு மாற்றம்; சீயந் தனையும் நரிவெல்வது திண்ண மாமோ? (தாரகன் வதை.78.) (வென்று அவன் நேமியை : நேமி - சக்கராயுதம். கண்டத்து ஏயும்படி - கழுத்தில் தங்கும்படி. அடுவாம் -சண்டை செய்வோம். மாற்றம் - வார்த்தை. சீயம்- சிங்கம்.] இவ்வாறு சொல்ஸிப் போர் செய்யத் தொடங்கினான்.