முருகன் செந்தூர் வருதல் 61 197 அந்தச் செய்தியைக் கேட்டவுடன் சூரனுக்குக் கோபம் வந்து விட்டது. படைகளைக் கொண்டு வாருங்கள். போர் செய்யப் போகலாம்" என்று கொதித்தான். அப்போது அமோகன் என்ற அமைச்சன் எழுந்து சொல்லத் தொடங்கினான். "பகைவர்களுடைய சூழ்ச்சியையும், பலத்தையும் அறிந்து நாம் போருக்குச் செல்ல வேண்டும். இந்திரனுடைய பேச்சைக் கேட்டுக் கொண்டு, பூதங்களைப் படையாகக் கூட்டி வந்து, சிவபெருமான் நேற்றுப் பெற்றுத் தந்த பிள்ளை வென்றான் என்றால், அவனை நினைந்து போருக்கு எழுவது புகழ் ஆகாது. அது உனக்குப் பழி யாகும். தண்டை அணிந்த காலை உடைய சின்னஞ் சிறு பிள்ளை, யானைத் தலையுடைய உன்னுடைய தம்பி தாரகனைக் கொன்றது ஆச்சரியம் அன்று. மிகவும் வலிமை உடையவர்கள் ஒரு காலத்தில் வலிமை இழப்பார்கள். மிகவும் எளியவராக இருப்பவர்கள் ஒரு காலத்தில் வீரராய்த் திகழ்வார்கள். அவற்றைக் கண்டு நாம் மனம் இழக்கக் கூடாது" என்று அவன் சொன்னான். கலகல மிழற்றும் தண்டைக் கழலடிச் சிறுவன் கைம்மாத் தலையுமுடை. இளவல் தன்னைத் தடிந்ததற் புதத்த தன்றால்; வலியரும் ஒருகா லத்தில் வள்மையை இழப்பர்; ஆற்ற மெலியரும் ஒருகா லத்தில் வீரராய்த் திகழ்வர் அன்றே. (கைம்மாத் தலை -யாளைத் தலை. இளவல் - தாராகாசுரன். தடிந்தது - அழித் தது. ஆற்ற - மிகவும்.] "யார் வென்றார்கள்? அவர்கள் படை எவ்வளவு? வலிமை எவ் வளவு? இவற்றை எல்லாம் அறிந்து போர் செய்யத் துணிய வேண்டாமா? யாரோ ஒருவர் சொன்னார் என்பதற்காக உடனே நீ படைகளுடன் புறப்படுவது முறையாகாது" என்று அந்த மந்திரி சொன்னான். அதன் பின் சூரபன்மன் தூதுவர்களை அனுப்பினாள். அவர்கள் போய்ச் செய்தியை அறிந்து வந்து சொன்னார்கள். முருகப் பெருமான் கேதாரம் அடைதல் முருகப்பெருமான் தன்னுடைய தந்தையின் உத்தரவைப் பெற்றுக் கைலாசகிரிக்குப் பக்கத்திலுள்ள, தன் ஆஸ்தான புரியாகிய கந்தகிரியிலிருந்து புறப்பட்டு வந்தான்.
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/217
Appearance